எழுதும் ஆர்வம்தான் என்னை இந்த வலைப்பூ தொடுக்க வைத்தது. உங்கள் வாசிப்பினாலும், விமர்சனங்களாலும், நட்பினாலும் மெருகேறக் காத்திருக்கும் என் எழுத்துகள்..
Saturday, November 13, 2010
தி சோஷியல் நெட்வொர்க்: படத்தின் முழுக் கதை
வலையுலகத்தைத் தாண்டிய என் நட்புவட்டத்தின் வற்புறுத்தலுக்காக "The Social Networking" திரைப்படத்தின் மொத்தக் கதையையும் இங்கு கிட்டத்தட்ட ஸீன் பை ஸீன் பதிவிடுகிறேன்.... இது என்னுடைய படைப்போ, அனுபவமோ ஏதுமின்றி... படத்தைப் பார்க்கப் போகிறவர்களின் சுவாரஸ்யத்தைக் கெடுக்கக் கூடிய பதிவு என்பதால் இங்கேயே சொல்லிவிடுகிறேன்.... என் நண்பர்கள் போலப் படத்தின் முழுக்கதையையும் படிக்க நினைப்பவர்கள் மட்டும் தொடரவும்.... மற்றவர்கள் படத்தைப் பற்றிய என்னுடைய பார்வையை அடுத்த இடுகையில் பகிர்ந்திருக்கிறேன் அதை மட்டும் பார்த்தல் நலம்....
படத்தின் விமர்சனம் இங்கே!
படத்தின் கதை:
உலகமும் நம் வாழ்க்கையும் சில ஐடியாக்களால் உருவானது... அது நாளும் புதுப்புது ஐடியாக்களால்தான் மாறியும், மேம்பட்டும் வருகிறது...
உலகெங்கும் கொட்டிக்கிடப்பதும் ஐடியாக்களை இணைப்பதும் "இணையம்"தான்... அந்த "இணையம்" என்பதே சில கணிணி ஜாம்பவான்களின் ஒருங்கிணைந்த ஓர் "ஐடியா" தான்!!
"எந்திரன்" கதை என்னுடையது.... ரோபோ கற்பனை என்னுடையது... என்று சிலர் நீதிமன்றத் துணை நாடியிருக்கும் நிகழ்கால சம்பவம்போல் "ஃபேஸ்புக்" என்னுடைய ஐடியா" என்று ஒரு குழுவும்... பில்லியன் டாலர் மதிப்பில் புரளும் "ஃபேஸ்புக்"கின் உண்மையான நிறுவனர் நான்தான் எனக்குரிய பாகம் என்னைச் சேரவில்லை என்று சேர்ந்து பிஸினஸ் துவங்கிய நெருங்கிய நண்பர்களின் கடுமையான வழக்குவாதத்துடன் படம் ஆரம்பிக்கிறது... முன்னும் பின்னும் ஊஞ்சல்போல பயணித்து இந்த வழக்குமன்றத்தில் தொடர்ந்து சங்கமிப்பதாய் நேர்த்தியான திரைக்கதை......
"சோஷியல் நெட்வொர்க்கிங்" எனும் ஓர் ஐடியாவை யோசிக்கிறது ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஒரு பிஸினஸ் மூளை....
யுனிவர்சிட்டியில் படிக்கும் பெண்கள் தங்கும் டார்மெட்ரிகளின் டேட்டாபேஸிலிருக்கும் பெண் மாணவர்களின் புகைப்படங்களை சில பல கோடிங் வரிகளைத் தட்டி ஹேக் செய்கிறது அதே ஹாவோர்டு பல்கலைக் கழக மாணவன் மார்க் என்பவனின் தலைக்குள் இருக்கும் ஒரு டெக்னிக்கல் மூளை....!
எட்வார்டோ எனும் மார்க்கின் நண்பன் தான் கம்போஸ் செய்திருக்கும் ஒரு "கம்பேரிங் அல்காரிதத்"தை அவசர அவசரமாக மார்க்குக்கு சொல்லிக்கொடுக்க... மீண்டும் சில கோடிங் வரிகளை அந்த வித்தைக்கார விரல்கள் கீபோர்டில் தட்ட Facemash.com என்னும் ஒரு வில்லங்கமான வெப்சைட் நள்ளிரவில் திடீர் உதயமாகிறது வெட்டவெளியான "நெட்"டின் வெளியில்! மார்க் திருடிய மாணவிகளின் படங்கள் இரண்டிரண்டாக Randomஆகத் திரையில் விரிய "Who looks more hotter in these two?" என்று இரண்டு படங்களையும் கம்பேர் செய்துத் தேர்ந்தெடுக்கும் வசதி வழங்கும் அட்ராசிட்டிதான் வெப்சைட்டின் கான்செப்ட்...!
ஹார்வோர்டு பல்கலைக்கழகம் மார்க்குக்கு கல்லூரியிலிருந்து ஆறுமாதகாலம் "Academic Probation" என்றழைக்கப்படும் நடத்தைக்கான வார்னிங்கைப் பிறப்பித்தாலும்... ஒரு மணி நேரத்தில் இரபத்துஇரண்டாயிரம் "ஹிட்கவுண்ட்"டை இண்டெர்நெட்டில் அள்ளியிருக்கிறது இந்த டீனேஜ் வில்லனின் ஒரு சின்ன சாம்பிள் பீஸ் என்று ஹார்வோர்ட் பல்கலைக்கழகத்தின் செய்தித்தாளான "ஹார்வோர்டு க்ரிம்ஸன்" தலைப்புசெய்தி வெளியிட... நெகெடிவ் இமேஜோடு பல்கலைக் கழகத்தில் ஒரு குட்டி ரஜினிகாந்தாக உருவெடுக்கத் துவங்குகிறான் மார்க்... :)
ஏற்கெனவே "சோஷியல் நெட்வொர்க்கிங் சைட்" என்னும் ஒரு கான்செப்டை வியாபாரரீதியில் யோசித்துவைத்திருக்கும் கேமரூன் மற்றும் டைலர் என்னும் இரட்டைச் சகோதரர்களின் பிஸினஸ்மூளைகளை மார்க்கின் விரல்நுனி வித்தகம் கவர... அவனை அழைத்து அசட்டுத்தனமாகத் தங்கள் ஐடியாவைச் சொல்லித் தங்களுடன் டெக்னிக்கல் பார்ட்னராகும்படி கேட்கிறார்கள் இந்த பில்லியன் டாலர் ப்ராஜெக்டுக்கு....
"ஃபேஸ்புக்" என்னும் ஒரு சோஷியல் நெட்வொர்க்கிங் வெப்சைட்டை நாமிருவரும் ஆரம்பிக்கிறோம்... லாபத்தில் எழுபது சதவீதம் எனக்கு முப்பது உனக்கு என்று தன் ஒரே நண்பன் எட்வார்டோவிடம் அடுத்தகாட்சியில் கூறுகிறான் மார்க்!!
ஜாயிண்ட் அக்கௌண்டில் எட்வார்டோ டெபாஸிட் செய்யும் அயிரம் டாலர்களுடன் துவங்குகிறது "தி ஃபேஸ்புக்.காம்" ஐடியாவைப் பறிகொடுத்த அப்பாவிகளான இரட்டை சகோதரர்கள் கொதித்தாலும் கோர்ட்டுக்குப் போவதற்கு யுனிவர்சிட்டியின் விதிகள் பூவேலியிட கொலைவெறியுடன் ஒரு ஜெண்டில்மென் ஃபைட்டுக்குத் தயாராகிறார்கள்...
எட்வார்டோவின் செல்வாக்கில் பல்கலைக்கழகத்தின் ஒரு "ஃபைனல் க்ளப்" என்று அழைக்கப்படும் இறுதியாண்டு மாணர்களின் சோஷியல் க்ளப்பில் பிரபலமாகிறது "தி ஃபேஸ்புக்.காம்"!
ஹார்வோர்டில் பில்கேட்ஸ் ஒரு செமினார் வழங்குகிறார்... அதில் கலந்துகொள்ளும் மார்க்கை செமினார் முடிந்து செல்லும் சீனியர்கள் எல்லாம் புகழ்ந்து "தி ஃபேஸ்புக்" சைட்டை உருவாக்கியதற்கு நன்றிசொல்ல யுனிவர்சிட்டியின் வில்லன் ரஜினிகாந்துக்கு மெல்ல ஹீரோ ரோல் கிடைக்கிறது!! :)
ஒருபுறம் கேமரூன் & டைலர் சகோதரர்கள் தாங்கள் திருட்டுக்கொடுத்த ஐடியாவுக்கு ஹார்வோர்டுக்குள்ளேயே நியாயம் கிடைக்க உச்ச நிர்வாகம்வரை படியேறிப் பரிதாபப்பட... அடுத்தடுத்த க்ளப்புகளையும் தாண்டி வேறு பல்கலைக்கழகத்திலும் பிரபலமடைகிறது "தி ஃபேஸ்புக்"
வித்தியாசமான தேர்வுகளையெல்லாம் வைத்து கைதேர்ந்த புரோகிராமர்களை யுனிவர்சிட்டியெங்கும் வேட்டையாடித் தங்களின் இணையக்குடும்பத்தில் கைகோர்க்கிறான் மார்க்.... இந்த மெகா மகா பிஸினஸ் ப்ளானைக் கையில்தூக்கிக் கொண்டு விளம்பரம் தேடி அலையத் துவங்குகிறான் மிகுதியான தன்னம்பிக்கை மற்றும் ஆற்றாமையில் துவண்டுவிடும் காம்பினேஷனில் வெளிப்பூச்சில்லாத வெளிப்படை மனிதனான எட்வார்டோ... "தி ஃபேஸ்புக்"கின் உப நிறுவனர்!!
ஷான் பார்க்கர்... "நாப்ஸ்டர்.காம்" மூலம் இண்டஸ்ட்ரியில் ஹிட்டடிக்கும் மியூசிக் ஆல்பங்களின் எம்பி3 வெர்ஷன்களை காபிரைட் தொல்லையின்றி இண்டெர்நெட்டில் இலவசமாக வழங்கி மில்லியன்களை அள்ளிய ஓர் இளம் வியாபார காந்தம்! பெண்கள் மற்றும் போதைப் பின்னணி ஷான்பார்க்கரின் வெளிப்படையான கரும்புள்ளிகள்.... "தி ஃபேஸ்புக்"கினால் கவரப்படும் ஷான்பார்க்கர்... மார்க்கிடமும் எட்வார்டோவிடமும் கவர்ச்சி பிஸினஸ் பேசுகிறான்... மார்க் ஷான் பார்க்கரின் வசீகரத்தில் மீளாமுடியாத அளவுக்கு சிக்கிக்கொள்ள மறுபுறம் எட்வார்டோ ஷானை வெறுக்கிறான்...."தி ஃபேஸ்புக்" வெறும் "ஃபேஸ்புக்" ஆவது ஷானின் பரிந்துரையில்தான்!!
மனக்கசப்புகள் எழுந்தாலும் ஒரு நல்ல டீம்ப்ளேயராக மேலும் பதினெட்டாயிரம் டாலர்களை அக்கௌண்டில் போட்டுவிட்டு தனக்குக்கிடைத்திருக்கும் இண்டெர்ன்ஷிப்புக்காக நியூயார்க் பயணமாக... கலிஃபோர்ணியாவில் மையம் கொள்கிறது மார்க் தலைமையில் "ஃபேஸ்புக்" டீம்.... ஆக்ஸிடென்டலி இன்ஸிடென்டலாக டீமில் ஷானும் இணைகிறான்.... மார்க்கின் முழுத்தலையாட்டலுடனான சம்மதத்தில்!
நியூயார்க்கிலிருந்து ஆர்வமாய்த் திரும்பிவரும் "ஃபேஸ்புக்" முதலாளி எட்வார்டோவை ஏர்போர்ட்டில் பிக் அப் செய்யக் கூட மறந்துவிட்ட டீமை ஷான் பின்புலத்தில் ஆட்டுவிக்க... கடும்மழையில் தானே டாக்ஸி பிடித்து வரும் எட்வார்டோவுக்கு நீண்ட நேர கதவுதட்டலுக்குப்பின் கதவைத் திறப்பது ஷான்.... கடுப்பேறிய எட்வார்டோவை மார்க்கினால் தன் மிக அலட்சியமாகப் பேசிப் பழகிய வாய்வார்த்தைகளால் சமாதானப் படுத்த இயலாமல் போக.... ஷார்ட் டெம்பர்ட் எட்வார்டோ தன் வங்கிக் கணக்கை மூடிவிட்டு ஊர் திரும்புகிறான்....
தன்னுடைய ஃபேஸ்புக் ப்ரஃபைலில் ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் "சிங்கிள்" என்று வைத்திருப்பதை சுட்டிக்காட்டி எட்வார்டோவைத் தன் பங்குக்கு அவனுடைய கேர்ள்ஃப்ரெண்ட் வெறுப்பேற்றிக் கொண்டிருக்க.... வங்கிக் கணக்கை மூடியதற்காக எட்வார்டோவை கடுமையாக கடிந்துகொள்கிறான் மார்க் தொலைபேசியில்.... இருப்பினும் உரையாடலின் முடிவில் "ஃபேஸ்புக்"கின் வியாபார விரிவாக்கத்துக்கு ஒரு பெரும் இன்வெஸ்டர் கிடைத்திருப்பதாகக் கூறி "எப்போ திரும்பி வர்றீங்க முதலாளி" என்று கேட்கிறான் நல்ல பையனாக.... நண்பேண்டா!!
ஒரு மெகா முதலீட்டுடன் மிகப்பெரிய பிஸினஸ்ஸாகப் புதுமுகம் காணவிருக்கும் "ஃபேஸ்புக்"கில் 34 சதவீதம் எட்வார்டோவுக்கும், 30% மார்க்குக்கும், 23% புத்துயிர் கொடுக்க முன்வந்திருக்கும் இன்வெஸ்டருக்கும் 7 சதவீதம் எட்வார்டோ இன்னும் வெறுக்கும் ஷானுக்கும் மீதம் 6% இன்னொரு இன்வெஸ்டருக்குமாகப் பிரிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்பட..... "மார்க்குக்கு பணத்தின்மீது கவனம் கிடையாது We have to protect him" என்று முக்கிய முதலீட்டாளர்களிடம் எட்வார்டோ அக்கறையாய் சொல்வதும் நண்பேண்டா!!
இதற்கிடையில் படகோட்டும் வீரர்களான முந்தைய கேமரூன்&டைலர் இரட்டைச் சகோதரர்கள் ஒரு மிகமிக க்ளோசான ஒரு முக்கியமான படகுப்போட்டியில் தோல்வியடைகிறார்கள்.... தோல்விக் களைப்பில் இருக்கும்போதே "ஃபேஸ்புக்"கின் அமானுஷ்யத்தை விவரிக்கும் செய்தியைக் கேள்விப்பட வில்லனாயிருந்து ஹீரோவான ஹார்வோர்டு ரஜினிகாந்த் மார்க் இப்போது சூப்பர்ஸ்டார் ஆகிவிட்டதில் வெறியேறி சட்டரீதியிலான நடவடிக்கை எடுத்து அவனை முடித்துவிட சூளுரைத்துக் கிளம்புகிறார்கள்.....
திடீர் ட்விஸ்டாக எட்வார்டோ, தான் கையொப்பமிட்டிருக்கும் டீலின் படி எட்வார்டோவின் பங்கை 34 சதத்திலிருந்து 0.03 சதவீதமாகக் குறைப்பதற்குத் தங்களுக்கு உரிமையிருப்பதாக ஷானின் இன்ஃப்ளுயென்ஸில் வந்த இன்வெஸ்டர் கோல்ட் ப்ள்ட்டடாகச் சொல்ல எரிச்சலின் உச்சிக்கு செல்லும் எட்வார்டோ, மார்க்குடன் கடும் வாக்குவாதம் செய்கிறான்.... அப்போது எட்வார்டோவை அலுவலகத்திலிருந்து வெளியேற்ற ஷான் செக்யூரிட்டியை அழைக்கக் கோபமாய் வெளியேறுகிறான் எட்வார்டோ.... மார்க் ஷானின் மூர்க்கத்தனமான நடத்தையைக் கண்டிக்கிறான் எட்வார்டோ போனபிறகு....
இப்படிக் கோபத்தில் வெளியேறிய எட்வார்டோவும், சூளுரைத்த ஏமாளி பிரதர்ஸின் கடைசிகட்ட முயற்சியும்தான் முதல் ஸீனில் ஆரம்பிக்கும் மார்க் Vs எட்வார்டோ Vs கேமரூன்&டைலர் ப்ரதர்ஸ் இடையிலான வழக்குவாதம்....
போதை மற்றும் இளம்பெண்கள் உடன் தவறான பின்னணி கொண்ட பிஸினஸ்மேன் ஷான் "ஃபேஸ்புக்"கின் ஒரு மில்லியனாவது ஹிட்கவுண்டைக் கொண்டாடும் பார்ட்டியில் இளம்பெண்களுடன் காக்கைன் வகை போதை வஸ்துக்களுடன் மிகவும் எம்பராஸ்ஸிங்காகப் போலீஸிடம் மாட்டிக்கொள்கிறான்... ஷானுடன் அங்கே ஃபேஸ்புக்கின் மொத்த டீமுமே போலிஸிடம் மாட்டி மீடியாவுக்குத் தலைப்புச் செய்தி கொடுத்திருக்க.....
முந்தையநாள் விரக்தியில் குடித்துவிட்ட ஷான் தன்னுடைய வழக்கமான ஃப்ரஸ்ட்ரேஷனில் செய்யும் தவறான செய்கையாக, தன்னுடைய ப்ளாக்கில் ஷானின் பார்ட்டியைப் பற்றிக் குறிப்பிட்டதுதான் போலீஸை சரியான நேரத்தில் சரியான இடத்துக்கு சென்று ஷான் அன்ட் கோ வைப் பிடிக்க ஏதுவாயிருந்திருக்கிறது என்று தெரிகிறது....
தொடர்ந்து சிம்பிளாக முடியும் படத்தில்... எட்வார்டோவுக்கு சரியான செட்டில்மெண்ட் கிடைத்துவிடுகிறது.... படகோட்டி பிரதர்ஸ் ஒலிம்பிக் வரை சென்று ஆறாவது இடம் பிடிக்கிறார்கள்.... உலகின் மிக இளம் பில்லியனராக மார்க் கண்டறியப் படுகிறான் என்னும் செய்திகள் திரையில் பளிச்சிட....
முதல் ஸீனில் மிகத் தவறாகப் பேசிப் புண்படுத்தி விலகிய தன்னுடைய பழைய கேர்ள் ஃப்ரெண்டை ஃபேஸ்புக்கில் கண்டுபிடித்து, ஃப்ரெண்ட்ஸ் ரெக்வெஸ்ட் அனுப்பி ரிசல்டுக்காக ஒவ்வொரு செகண்டும் ரெப்ஃரஷ் செய்து பார்த்தவனாய் மார்க் இருக்க அலட்டலில்லாமல் முடிகிறது இந்த நேரேட்டிவ் ஸ்க்ரீன்ப்ளே..... :)
அன்புடன்,
பிரபு எம்
Subscribe to:
Post Comments (Atom)
Gud work.really gud review frnd.. i liked d mve lot
ReplyDeleteThank you so much Ramesh.. :)
ReplyDeleteI am happy that you liked the movie..
We have given a link to here for the story. Thanks
ReplyDeletehttp://laavi.blogspot.com/2010/11/facebook.html