எழுதும் ஆர்வம்தான் என்னை இந்த வலைப்பூ தொடுக்க வைத்தது. உங்கள் வாசிப்பினாலும், விமர்சனங்களாலும், நட்பினாலும் மெருகேறக் காத்திருக்கும் என் எழுத்துகள்..
Sunday, November 21, 2010
"குருவி"யைத் தியேட்டரில் பார்த்த கதை.... :-))))
"எந்திரன்" படம் பார்க்கமாட்டேன் என்று சொன்னவர்களெல்லாம் பின்பு எப்படியோ தியேட்டருக்குப் போக நேர்ந்த (!) கதைகளைக்கூடப் பதிவுலகில் சொல்லி முடித்துவிட்டார்கள்... எப்பவோ வந்துட்டுப் போன இந்தக் கொடுமையைப் பார்த்த கதை பத்தி இப்போ எதுக்கு என்று கேட்டால்.... இந்த அனுபவக் கதையைப் பேச்சுவாக்கில் சொன்னபோது கேட்ட நண்பர்கள் எல்லாம் எழுதச் சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.... சில விஷயங்களைச் சொல்லும்போது இருக்கும் சுவாரஸ்யம் எழுத்தில் வராது.... படிச்சுப்பாருங்க... பாதில போரடிச்சா சேனல மாத்திடுங்க!!
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வெள்ளிக்கிழமை இரவு.... அந்த இரவு எங்களுக்கு மறக்கமுடியாத ஒரு பயங்கர அனுபவத்தைத் தரப்போகிறது என்று எங்களுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை....
சீன் ஓபனாகுது....
பெங்களூரு மாரத்தஹள்ளியில் ராத்திரி நேரம்....
இரவு சாப்பாட்டுக்கு அறை நண்பர்கள் எல்லாரும் புரோட்டா கடையில் கூடியிருந்தோம்... எதையோ பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்... சீரியஸாகப் பேசிக்கொண்டிருந்த நண்பன் ஒருவன் திடீரென்று....
"டேய் இன்னைக்கு வெள்ளிக்கிழமை"... என்றான் பதறிப்போய்....
எல்லாரும் அமைதியாக அவனையே பார்க்க...
"நாளைக்கு நம்ம யாரும் ஆஃபீஸ் போகவேண்டாம்டா...!!!!" என்று சத்தமாகக் குதூகலித்தான்...
"ஆமால்ல!!" என்று நாங்களும் சிலிர்த்தெழ...
செல்ஃபோன்ல அலாரம் வைக்காம... Cab டிரைவர் கால் வராம... முழுசா நாற்பத்தெட்டுமணி நேரம் நமக்கேஏஏஏஏ..... நமக்காஆஆஆ!!! என்று கனவுபாட்டுக்கு லொகேஷன் தேடுவதற்குள்....
"அண்ணா....பாருங்கண்ணா... துளசி தியேட்டரில் தமிழ்ப்படம்... அண்ணா...."குருவி"ண்ணா...!!!!!" என்று எக்ஸைட் ஆகிக் கூவ ஆரம்பித்தான் எங்கள் கூட்டத்தில் ஒரு குட்டி ப்ளாக் ஷீப்.... "ம்ம்மேமே".... ஒரேயொரு விஜய் ஃபேன்... லீவுக்கு ஊர்சுற்றிப் பார்க்க எங்களை நம்பி பெங்களூரு வந்திருக்கும் நண்பனின் சின்னத் தம்பி...
(யாருக்கும் ரசிகனாகாமல் பாரபட்சமின்றி எல்லாரையும் கலாய்க்கும் கூட்டம் நாங்கள்!!)
"டேய்.. அவனா நீ!!!!.... சொல்லவே இல்ல!" என்று நாங்கள் அலறுவதற்குள்...
"ண்ணா ண்ணா.. ப்ளீஸ்ணா ப்ளீஸ்ணா...." என்று கெஞ்ச ஆரம்பித்துவிட்டான் அந்தக் குட்டிப்பிசாசு..
எங்களில் ஒருவன் திடீரென எமோஷனலாக....
"டேய் நீ.. நீ என்னை என்ன சொல்லிக் கூப்பிட்ட??" என்று கேட்க...
"அண்ணா..." என்று எக்கோ எஃபெக்டில் அந்தத் தம்பி சொன்னான்....
"லாலாலா லலா லாலாலா...." என்று எஸ் ஏ ராஜ்குமார் மியூசிக் கேட்டது...
"எங்க திரும்ப சொல்லு..."... அதே எமோஷன்...
"அண்ணா....." .... அதே எக்கோ...
மீண்டும் "லாலாலா லலா லாலாலா" கேட்டது
அடுத்த சீன்....
டிக்கெட் கவுண்டரில் அழுதுகொண்டே நின்றுகொண்டிருக்கிறேன் நான்... (எனக்கேஏஏஏஏ..எனக்காஆஆ என்று சற்று நேரத்துமுன் ஒலித்த அதே ஹைரப்பா பாட்டு இப்போது டி எம் எஸ் குரலில் சோகமாக ஒலிக்கிறது பின்னணியில்)
ஏன்யா...எவ்ளோ விஜய் ஃபேன்ஸ் இருக்கீங்க... படம் வந்த ரெண்டாவது நாள் செகண்ட் ஷோ.. ஹவுஸ்ஃபுல் ஆகியிருக்க வேண்டாமாய்யா!! ஆகலியே... எட்டு டிக்கெட்டுகள் பால்கனியில்.... முதல்போணியே நாங்கதான்....
நல்ல சென்டர் சீட்டை எங்கள் செல்லத் தம்பிக்குக் கொடுத்துவிட்டு எட்டாவது ஆளாகக் கார்னர் சீட்டில் நான் பதுங்கிக்கொண்டேன்.... "கில்லி" டீம் திரும்பவும் இணைஞ்சிருக்காங்க, நிச்சியமா படம் பாக்குற அளவுக்குக் இருக்கும்"னு ஓர் எதிர்பார்ப்பு என் மனசுக்குள்ளேயும் இருந்துச்சு பாருங்க...... அதைத்தான் பாஸ் இன்னைக்கு வரைக்கும் என்னால தாங்கிக்கவே முடியல...!!!
கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் வரப் பாதி தியேட்டர் நிறைந்தமாதிரி இருந்தது....
அப்போதான் வந்தான் அந்த ஜீன்ஸ் போட்ட கடோத்கஜன்...
பழைய ரஜினி படத்துல எல்லாம் ஒவ்வொரு படத்துக்கும் ஒவ்வொரு குண்டனைப் பிடிச்சுக் கூட்டிட்டு வருவாங்க இல்லயா க்ளைமேக்ஸ் ஃபைட்டுக்கு... அந்த மாதிரி ஒரு உருவம்..... ஆறடிக்கு இரண்டு இஞ்ச் குறைஞ்ச நானே அவன் நெஞ்சுவரைக்கும்தான் இருக்கேன்......அண்ணனோட பை-செப்ஸே என் உடம்பகலத்துக்கு இருக்குது! கிருதா மீசையெல்லாம் வெச்சு... வயலட் கலரில் டைட்ட்ட்...டான ஒரு டி-ஷர்ட் போட்டு எங்களுக்கு முன்வரிசையில் அவரு திடுமுன்னு உக்காந்தப்போ பொறிகலங்கி பூமி அதிருனது எங்க கண்ணுல தெரிஞ்சது....!!
தடியன் உக்காந்தது கரெக்டா எங்களின் செல்லத் தம்பி பொடியனின் சீட்டுக்கு முன்னால்.....
படம் ஆரம்பிச்சு.... தளபதி அந்துபோன கார் ஆக்ஸலரேட்டரைப் பல்லால கடிச்சு இழுத்து கார்ரேஸில் ஸ்பீடாகப் பிச்சு ஏறிக்கொண்டிருக்கும்போது.... இந்தப் பொடியன் ஸீட்டுமேல ஏறி முட்டிபோட்டுத் திரையைப் பார்க்க மல்லுக்கட்டியிருக்கிறான்...... ஸீட்டில் உட்கார்ந்து பார்த்தால் முன்ஸீட்டிலிருக்கும் அந்த இரும்புக்கோட்டை முரட்டுசிங்கத்தின் முதுகுமட்டும்தான் தெரிந்திருக்கிறது இந்தக் கத்திரிக்காய் பிஞ்சுக்கு!!
தளபதி அங்கு ரேஸில் ஜெயித்து மாளவிகாவுடன் "டண்டர்னா டர்னா.. டணகுணக்கா டணகுணக்கா" பாட்டுக்கு முட்டிபோட்டு போட்டு எழுந்திரிச்சு ஆட ஆரம்பிக்க..... அதற்குமேல் அடக்கமுடியாமல் "தடியன் மறைக்கிறான்ணா" என்று பக்கத்தில் இருந்த நண்பனின் காதைக் கடித்திருக்கிறான் பொடியன்....
அப்படியே குசுகுசுவெனக் கிசுகிசுத்து விஷயம் ஒவ்வொரு காதாக இடம்மாறிக் கடைசியில் இருந்த என் காதில் வந்து விழுந்தது...!
"மச்சான்... அந்தத் தடியன் நம்ம தம்பிக்கு ஸ்க்ரீனை மறைக்கிறானாம்... அவனைக் கொஞ்சம் டவுன் பண்ணி உக்காரச்சொல்லு..." என்று சகஜமாகச் சொன்னான் நண்பன்...
நல்லா கேட்டுக்கோங்க நியாயத்த... எட்டு சீட்டு தள்ளி உக்காந்திருக்குற நான்... எட்டிக்கிட்டு போய் "சார் கொஞ்சம் டவுன் பண்ணி உக்காருங்கன்னு அந்த சார்கிட்ட சொல்லனுமாம்!!"
ஹ்ம்ம்ம்.... "நண்பேன்டா!!" என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு... நானும் மெதுவாக குண்டனின் காதுபக்கதில் சென்று கிசுகிசுத்தேன்...
"சார்... சார்... "
"என்ன?" என்பதுபோல் அவரது கதகளிப் புருவங்களை உயர்த்தினார் அந்தப் பொன்னம்பலம்...
"வஞ்சகமில்லாம வளந்திருக்கீங்க நீங்க... ஆனா பாவம் உங்களுக்குப் பின்னால ஒரு பச்சப்புள்ள... இன்னும் முளைக்கவே இல்ல... அவனுக்கு உங்க விரிஞ்ச முதுகுல பாவம் விஜய் தெரியல.... ஸோ நீங்க கொஞ்சம் டவுன் பண்ணி உக்காந்துக்கிட்டீங்கன்னா..... உங்க காதுக்கும் கழுத்துக்கும் நடுவுல இருக்குற கேப்புல புகுந்து அவன் படம் பாத்துக்குவான்...."
என்று படு பணிவாக முறையிட்டேன்.. ..கீழே ஜீன்சுக்குள் என் தொடை நடுங்க....
அதற்கு அந்த மாயாபஜார் ரங்காராவ்.... "நான் படம்பாக்க ஆரம்பிச்ச காலத்துல இருந்தே இதே தொந்தரவுதான்டா" என்று அலுத்துக்கொள்ள....
"அதுக்கு நீங்க அளவா வளந்திருக்கணும்!" என்று நான் சொன்னது நல்லவேளை அவர் காதில் விழவில்லை...
அண்ணன் கொஞ்சம் டவுன் செய்து உட்கார்ந்துகொள்ளத் தம்பிக்கு மனசெல்லாம் மத்தாப்பூ.... பயபுள்ள அந்தப் படத்தை அவ்ளோ ரசிச்சு பாக்குது... ஹ்ம்ம்ம்....யாரு பெத்த புள்ளையோ... என்னத்த சொல்லுறது....!!
ஃபர்ஸ்ட் ஹாஃபில் ஏதோ அங்கிங்கு விவேக் புண்ணியத்தில் படம் நகர்ந்தது... அவ்வப்போது தளபதி வண்டி வண்டியாக எடுத்துவிடும் பஞ்சு டயலாக்குகளுக்கு என்த்து வாகி தடியன் நிமிர....... "அண்ணா...".. என்று என்னைப்பார்த்துப் பொடியன் அலற.... நானும்... "அண்ணா..." என்று தடியனின் தோளை அழுத்த..... இப்படியே ஒருவழியாக இண்டர்வெல் வந்துவிட்டது.....
இண்டெர்வெலில் யாரும் யார் முகத்தையும் பார்த்து பேசிக்கொள்ளவேயில்லை..... தம்பி செண்டிமெண்டில் லாலாலா பாடிய எமோஷனல் நண்பன் அவனாகவே முன்வந்து அமைதியாக அத்தனைபேரின் பாப்கார்ன் கோன் ஐஸ்களுக்கு பில்லைக் கட்டினான்...
"வாங்கடா... உள்ளே போகலாம் படம் போட்டுடப்போறான்.." என்று சொன்னான் பாசமான முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்டு....
கண்கலங்க அவனை ஒருமுறை பார்த்துவிட்டு மீண்டும் உள்ளே போணோம்....
இதுக்கு மேல தடியனோட கபடியாட முடியாது என்றுப் பொடியனின் ஸீட்டில் நான் அமர்ந்துகொண்டேன்...
கேண்டீனையே காலிபண்ணிவிட்டு படம் போட்டபின் வந்து சேர்ந்தார் அந்த ஆளவந்தார்...
"சார் இனிமே நோ ப்ராப்ளம்... நீங்க ஃப்ரீயா உக்காரலாம்... நான் ஸீட்டை மாத்திக்கிட்டேன்!!"
என்று குண்டனிடம் பயபக்தியுடன் நான் அப்ரூவரானேன்....
"ஹ்ம்ம்ம்" என்று லேசாக சிரித்துவிட்டு மீண்டும் பூமியதிர தங்கென்று ஸீட்டில் அமர்ந்தார் அந்தத் தாராசிங்கு...
யப்பா.......செகண்ட் ஆஃபுக்குமேல படம்..... அய்யய்யய்யோ.... சத்தியமா என்னால தாங்கவேமுடியல... தில், தூள், கில்லி எடுத்த தரணி படமா இது..... என்னய்யா ஆச்சு உனக்கு???!! என்று செத்துப்பொழச்சு குத்துயிரும் கொலையுயிருமா வாட்சைப் பார்த்தால்...... அடுத்து ஒரு பாட்டு ஸீன்....! அவனவன் செத்துபோய் இருக்கும்போது.....
"மொழ மொழன்னு யம்மா யம்மா" ன்னு விஜய்யும் த்ரிஷாவும் மஞ்ச மஞ்சேர்னு டிரெஸ்ஸ போட்டு குழைஞ்சுக்கிட்டு இருக்குறாய்ங்க...... "அடிங்கொய்யால..." என்று பொறுக்கமுடியாமல் கொதித்தெழுந்து விட்டேன்..... முன்ஸீட்டுத் தடியனின் காதைச் சுரண்டினேன்...
"ஏன்டா.. உனக்குமாடா மறைக்குது... பாட்டப் பாக்க விடுங்கடா!! என்று புலம்பியவனிடம்...
"அண்ணே..... படம் தாங்கமுடியலண்ணே...... நீங்க கொஞ்சூண்டு நிமிந்து அப்புல வந்தீங்கன்னா எனக்கு ஃபுல் ஸ்க்ரீனும் மறைஞ்சிடும் நான் காதபொத்திக்கிட்டுத் தூங்கிடுவேன்..... ப்ளீஸ்ணா.......!!" என்று நான் கெஞ்ச....
குண்டன் டென்ஷனாகிவிட்டான்.... "புரியுதுண்ணா... புரியுது... உங்க கஷ்டம் புரியுது.....எங்களுக்கு நீங்க மறைச்சுடுவீங்க... உங்களுக்கு யாரு மறைப்பா??!!!!" என்று பக்கத்து ஸீட்டு நண்பன் அவன் பங்குக்கு ஒரு பிட்டைப் போட்டு மீண்டும் கலாய்க்க.....
முன்வரிசை.. பின்வரிசையிலெல்லாம் சிரிப்பு சத்தம்......
"ஆபரேட்டருக்கு யாரு மறைப்பாருய்யாஆஆ??" என்று முன்னாலிருந்து சத்தமாக ஒரு குரல்வேறு....!!
சிரித்துக் கலாய்த்து எப்படியோ எங்களை நாங்கள் காப்பாற்றிக்கொள்ள ஒருவழியாக படத்தின் வில்லன்களை மட்டும் விஜய் கொன்றிருந்தார் க்ளைமேக்ஸில்.. எங்களை மன்னித்து விட்டுவிட்டார் :)
கொஞ்சநேரம் கவலைய மறந்து சந்தோஷமாயிருக்கலாம்னு தானய்யா தியேட்டருக்குப் போறோம்.... ஹ்ம்ம்.. என்னத்தசொல்ல.....
நான் "வில்லு" , "அணா கிணா தணா மகன்"(அதான் அழகிய தமிழ் மகன்!) படத்துக்கு எல்லாம் போகல.. நீங்க போயிருந்தா உங்க கதையையும் சொல்லுங்க!!!
படம் முடிஞ்சதும் எல்லாரும் எழுந்தரிக்குறதுக்கு முன்னாடியே எழுந்து குண்டன் கையில சிக்காம நான் எஸ்கேப் ஆனது தனிக்கதை!!!!
ஏய்ய்.. குருவி குருவி குருவி அடிச்ச்சாசாஆஆஆ!!! :-)))))
அன்புடன்,
பிரபு எம்
Subscribe to:
Post Comments (Atom)

உங்கள் வலைப்பூவிற்கு இன்றே முதல் வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஇனி பின்தொடர்கிறேன்...
@ Philosophy Prabhakaran..
ReplyDeleteவணக்கம் நண்பரே....
ரொம்ப ரொம்ப நன்றி...
வாங்க பழகலாம்!! :-)
பாவம் தடியர் (மரியாதை).. நல்லவராத்தான் இருந்திருப்பார் போல :) நீங்கதான் பில்ட் அப் கொடுத்துட்டீங்க.
ReplyDeleteஅவரு பாடி பில்டப் அந்தமாதிரி நண்பா!!
ReplyDeleteநானெல்லாம் டிரைலர்லயே படத்த பார்த்துட்டேன். செமயா இருந்துச்சு ....:)
ReplyDeleteரொம்ப சிரிச்சு ரசிச்சு படிச்சேங்க! நீங்க குருவி பார்த்த கதை சூப்பர்!
ReplyDeleteஆமா சுறா பார்த்தீங்களா?
இதுக்கெல்லாம் தனி தைரியம் வேணும் பிரபு.உசுரோட வெளில வந்ததுக்கு காலர தூக்கி விட்டுக்கலாம்.
ReplyDeleteநல்ல அனுபவம்...ரசிச்சு படித்தேன்!
ReplyDeleteநன்றி ஜீவன் பென்னி...
ReplyDeleteநீங்க எஸ்கேப்! :)
ரொம்ப ரொம்ப நன்றி எஸ்.கே :)
ReplyDeleteசுறாவா!! குருவி ஒரு குட்டிப் பறவை அந்தச் சின்ன அலகால கொத்தினதுக்கே ரெண்டு வருஷம் ஆகியும் வலி மறக்காம பதிவு போட்டிருக்கேன்.... "சுறா"... மாதிரி ரவுடி மீன்கூட எல்லாம் மொதினா... செத்திடுவேன்!!
காவல்காரன், வேலாயுதத்தை எல்லாம் கலாய்க்குறதுக்காவது நான் உயிரோட இருக்கணும் இல்லயா! :)
//இதுக்கெல்லாம் தனி தைரியம் வேணும் பிரபு.உசுரோட வெளில வந்ததுக்கு காலர தூக்கி விட்டுக்கலாம்//
ReplyDeleteபின்ன.... சும்மாவா... நான் என் ரெஸ்யூம்ல போட்டிருக்கேன்....
"அச்சீவ்மெண்ட்ஸ்"னு... "குருவி", "கந்தசாமி" படங்களை டூப் போடாம நானே த்ரீ அவர்ஸ் தியேட்டர்ல உக்காந்து பாத்திருக்கேன்னு...
அதுனாலதான் "இவன் எதயும் தாங்குவான்டா"ன்னு ஒரே இண்டர்வியூல இந்த வேலை எனக்குக் கிடச்சுது :)
//நல்ல அனுபவம்...ரசிச்சு படித்தேன்!//
ReplyDeleteப்ரியா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்... உங்களின் முதல் வருகைக்கும்... ஊக்குவிக்கும் கருத்துரைக்கும்! :)
பிரபு மிக்க அருமை.... சிரித்து சிரித்து மகிழ்ந்தேன்.... உங்களின் பிவிகோல் விளம்பரதின் விமர்சனத்தையும் ரசித்தேன் ... இன்னும் வேறு சில சமிபத்திய விஜய் படங்களின் விமர்சனங்களை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருப்பேன்...
ReplyDeleteரொம்ப ரொம்ப நன்றி மீரா :-)
ReplyDeleteஇந்த அனுபவத்துக்கு அப்புறமும் அவர் படத்துக்குப் போயிருப்பேன்னு நினைக்கிறீங்க??!! :-))
அன்புள்ள எங்க ஊரு சகோதரனுக்கு :)),
ReplyDeleteநீங்க குருவி பார்த்து நொந்ததும் இல்லாமல்,எங்களுக்கும் நீங்கள் இடையில் இடையில் அந்த பட காட்சிகள் எல்லாம் விவரிச்சு தாங்கொண்ணா தீய செயலை செய்தி விட்டீர்...அதனால் நாங்களும் குருவி trailer பார்த்த ஒரு கொடுமையை நீங்கள் இழைத்து விட்டீர்...ம்ம்..உங்களுக்கு ஒரே தண்டனை தான்...நம்ம ஊருக்கு பக்கம் வந்தால் என்கவுன்டர் தான்...ஜாக்கிரதை....))))
குருவியை மீண்டும் நினைவூட்டிய கடுப்பில்,
சகோதரி ஆனந்தி...:)))
அய்யோ அன்பு மதுரை சகோதரி...
ReplyDeleteஊருக்கு வர்றதுக்கு நாட்களை கவுண்ட்டவுன் போட்டு இருக்குற நேரத்துல இப்படி மிரட்டினால் எப்படி!! :-)
உங்களுக்கு நான் வரும்போது சுறா, வேட்டைக்காரன் படங்களின் ஒரிஜினல் டிவிடி வாங்கிட்டு வரேன்... :-)))
நல்ல பகிடிதான்...பிரபு.பாவம் குருவியா நீங்களான்னுதான் தெரில !
ReplyDeletehaahaaaa...
ReplyDeleteரொம்ப நன்றிக்கா :-)))))
//உங்களுக்கு நான் வரும்போது சுறா, வேட்டைக்காரன் படங்களின் ஒரிஜினல் டிவிடி வாங்கிட்டு வரேன்... :-)))//
ReplyDeleteதாராளமா...))அப்படியே ரெண்டு சயனைடு குப்பியும் வாங்கி வரவும்..டிவிடி தொட்ட பாவத்துக்கு எனக்கும்,கொடுத்த சகோ உங்களுக்கும்...)))))
சயனைடு சகோதிரியே....
ReplyDelete"ஹைக்கூ அதிர்வுகள்"ன்னு மென்மையெல்லாம் இடுகைகள்லதானா...
பின்னூட்டத்தில் எல்லாமே "குங்ஃபூ அதிர்வுகளா"ல்ல இருக்கு!! :-)))
உங்களுக்குத் தெரியாமதான் ஊருப்பக்கமே வரணும் போலயே... :-)
பயபக்தியுடன்,
பிரபு எம் :)