Sunday, January 02, 2011

புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

ந‌ண்ப‌ர்க‌ள் அனைவ‌ருக்கும் என் ம‌னமார்ந்த‌ புத்தாண்டு வாழ்த்துக்க‌ள்!! :)

லேட்டான என் வாழ்த்தை லேட்ட‌ஸ்டாக‌ ஏற்றுக்கொள்ளுமாறு அன்புட‌ன் வேண்டிக்கொள்கிறேன்! ;‍-)

2010 முடிந்துவிட்டது!!!2011 கொண்டாட்டங்களும் முடிந்துவிட்டன... இதோ இன்னும் இரண்டுமூன்று வாரங்களுக்குக் கையெழுத்துப்போட்டுத் தேதியெழுதும்போது வருடத்திற்கு 10 என்று எழுதிவிட்டுப்பின் கடைசி இலக்கத்தை அடித்து 1 ஒன்று என மாற்றுவோம்... அவ்வளவுதான் ஜனவரி முடிவதற்குள் பழகிவிடும் 2011 என்று சரியாகக் குறிப்பதற்கு..... முழுதாகப் பழகுவதற்குள் முடிந்துவிடும் 2011ம்!!!

கால‌த்தின் வேக‌த்தை நாம் மிஞ்சிவிட்டோம்.... வ‌ருட‌ங்க‌ள் வாடுமுன்னே உதிர்ந்துவிடுகின்ற‌ன‌....

ஒவ்வொரு வ‌ருட‌மும் ஒரு ப‌ய‌ண‌ம்....

இல‌க்க‌ற்ற‌ ப‌ய‌ண‌ம‌ல்ல‌... ஆனால் இல‌க்கு தெளிவாக இல்லாததுதான் சுவார‌ஸ்ய‌மே!

ம‌துரை என்று எழுதியிருக்கும் ப‌ஸ்ஸில் ஏறினால்கூட‌ அது "ம‌துரை"க்குத்தான் போகும் என்று நிச்சிய‌மில்லாத‌ ப‌ய‌ண‌ம் :) வாழ்க்கைப் பய‌ண‌த்தில் டிரைவ‌ர்ஸீட்டு என்றுதான் த‌னியாக‌ எதுவுமில்லையே..... ஒவ்வொரு ஸீட்டுமே டிரைவ‌ர் ஸீட்தானே!! ஸ்டியரிங்கைப் பிடிப்பதும் பிடிக்காததுமட்டுமே சாய்ஸ்...! எங்கேயோ கிள‌ம்பி எங்கெங்கோ சுற்றினாலும் தொலைந்துபோய்விட‌ ம‌ட்டும் வாய்ப்பில்லை.... :) பீச் குதிரையில் த‌ப்பித்துப்போன‌ வ‌டிவேலு மாதிரி புற‌ப்ப‌ட்ட‌ இட‌த்துக்குத் திரும்பி வ‌ந்தே ஆக‌வேண்டும்!!!

வ‌லைப்ப‌திவு வைத்திருப்ப‌து மிக‌வும் ந‌ன்றாக‌ இருக்கிற‌து..... இந்த‌ ஒரு வ‌ருட‌ம் எப்ப‌டி இருந்திருக்கிற‌து என்று நினைத்துப் பார்க்க‌ அந்த‌ ஒரு வ‌ருட‌த்தின் ந‌ம் ப‌திவுக‌ளே ஃப்ளாஷ்பேக் சுற்றுகின்ற‌ன‌... :)

சென்ற‌ வ‌ருட‌ம் திடீரென‌க் க‌டைசி இர‌ண்டுமாத‌ங்க‌ள் டாப்கிய‌ர் போட்டு நிறைய‌ எழுத‌த்துவ‌ங்கினேன்....

இந்த‌ வ‌ருட‌மும் அதைத் தொட‌ர‌த்தான் விருப்ப‌ம்.... பார்க்கலாம்.... :)
பதிவுல‌க‌ப் பய‌ண‌ம் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய‌ அனுப‌வ‌மாய் மிக‌மிக‌ ச‌ந்தோஷ‌மான‌ அனுப‌வ‌மாய்த்தான் தொட‌ர்கிற‌து..... தொட‌ர்வோம் வாழ்க்கைப் ப‌ய‌ண‌த்தின் ஜ‌ன்ன‌லோர‌ப் பொழுதுகளைப் ப‌திவுல‌கில் அனுப‌வ‌, க‌ற்ப‌னைப் ப‌கிர்வுகளாய்.... :-)

Wish You All A Very Happy New Year... 2011 :)

அன்புட‌ன்,
பிரபு எம்

13 comments:

  1. thank u prabhu.same to u

    ReplyDelete
  2. என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் பிரபு.

    ReplyDelete
  3. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.. சகோதரம்..

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    வெடி குண்டொன்றை தயாரிப்பது எப்படி ?? (செய்முறையுடன்)

    ReplyDelete
  4. கலக்குங்க பிரபு கலக்குங்க.

    ReplyDelete
  5. வாப்பா ...தொர:))))...2011 பாதி முடிஞ்ச பிறகு வந்து விஷ் பண்ற...:)))) இதுல தத்துவம் வேற...அப்பா சாமி தல சுத்துது...:))))

    ReplyDelete
  6. //ம‌துரை என்று எழுதியிருக்கும் ப‌ஸ்ஸில் ஏறினால்கூட‌ அது "ம‌துரை"க்குத்தான் போகும் என்று நிச்சிய‌மில்லாத‌ ப‌ய‌ண‌ம் :) வாழ்க்கைப் பய‌ண‌த்தில் டிரைவ‌ர்ஸீட்டு என்றுதான் த‌னியாக‌ எதுவுமில்லையே..... ஒவ்வொரு ஸீட்டுமே டிரைவ‌ர் ஸீட்தானே!! ஸ்டியரிங்கைப் பிடிப்பதும் பிடிக்காததுமட்டுமே சாய்ஸ்...! எங்கேயோ கிள‌ம்பி எங்கெங்கோ சுற்றினாலும் தொலைந்துபோய்விட‌ ம‌ட்டும் வாய்ப்பில்லை.... :) பீச் குதிரையில் த‌ப்பித்துப்போன‌ வ‌டிவேலு மாதிரி புற‌ப்ப‌ட்ட‌ இட‌த்துக்குத் திரும்பி வ‌ந்தே ஆக‌வேண்டும்!!!//

    அப்பப்ப்பா...முடியல...அழுதுருவேன்...:)))))))

    ReplyDelete
  7. மதுரைக்கு போயிட்டு வந்ததில் இருந்து என் சகோ கொஞ்சம் மந்திரிச்சு விட்ட மாதிரியே இருக்கிற மாதிரியே இருக்கே..:)))))

    ReplyDelete
  8. Wish You All A Very Happy New Year... 2012 :))))))))))))))
    சகோ மாதிரி இல்லை...நாங்கலாம் ரொம்ப பாஸ்ட்..:)))

    ReplyDelete
  9. Thank you so much Padma :-)
    Wish you a Very Happy and Successful New Year..

    ReplyDelete
  10. நன்றி ஸ்டார்ஜன் சார் :)
    உங்களுக்கும் குடும்பத்துக்கும் என்னுடைய இனிய நல்வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  11. அன்பு சகோதரன் மதி சுதாவுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் :)

    ReplyDelete
  12. வணக்கம் இனியவன் சார்...
    மிக்க நன்றி உங்களுடைய முதல்வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் :)
    இனியவருக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  13. //மதுரைக்கு போயிட்டு வந்ததில் இருந்து என் சகோ கொஞ்சம் மந்திரிச்சு விட்ட மாதிரியே இருக்கிற மாதிரியே இருக்கே..:))))) //

    ஊர்ப்பாசம்... சகோ பாசம் எல்லாத்தையும் மறந்துட்டு இப்படி சேம் சைடு போடுற இந்த சகோவைப் பாருங்க மக்களே!!! :)

    இருந்தாலும் பரவாயில்ல.... சகோவுக்கு மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் :)

    ஸாரி சகோ ரொம்பவே லேட் தான் என்ன பண்ண கொஞ்சம் வேலைகள் அதிகமாகிடிச்சு :)
    இதுக்கே தல சுத்துனா எப்படி இன்னும் நாங்க கைவசம் ஏகப்பட்ட தத்துவங்கள் வெச்சிருக்கோம்ல...

    புத்தாண்டும் அதுவுமா நக்கலா விடுறீங்க..... இருங்க பாட்டி கதை அடுத்த பாகம் போஸ்ட் பண்ணுறேன்!!

    Happy New Year to you and Family Sago :)

    ReplyDelete

வருகைக்கும் வாசிப்புக்கும் ரொம்ப நன்றி... உங்க கருத்தையும் சொல்லலாமே.. :-)