Friday, January 21, 2011

2 ஸ்டேட்ஸ் : சேத்தன் பகத் (2009)



ப‌ஞ்சாபி க்ரிஷ்ஷும் த‌மிழ்நாட்டு அந‌ன்யாவும் காத‌லித்துக் குடும்ப‌ங்க‌ளின் ச‌ம்ம‌தத்தோடு திரும‌ண‌த்தில் இணைவ‌துதான் சேத்த‌ன் ப‌க‌த்தின் நான்காவ‌து சூப்பர் டூப்பர் ஹிட் ஆங்கில‌ நாவ‌ல்    "2ஸ்டேட்ஸ்"!!


உல‌கெங்கும் காதல் திருமணத்தின் சிம்பிள் சூத்திர‌ம்....

"பைய‌னுக்கும் பொண்ணுக்கும் ஒருவ‌ரை ஒருவ‌ர் பிடிக்க‌ வேண்டும்"



ஆனால் அதுவே இந்தியாவில்....


               "பையனுக்கும் பெண்ணுக்கும் ஒருவரை ஒருவர் பிடிக்க வேண்டும்....
               பைய‌னைப் பெண்ணின் குடும‌த்துக்குப் பிடிக்க‌ வேண்டும்....
               பெண்ணைப் பைய‌னின் குடும்ப‌த்துக்குப் பிடிக்க‌ வேண்டும்....
               பைய‌னின் குடும்ப‌த்தைப் பெண்ணின் குடும்ப‌த்துக்குப் பிடிக்க‌ வேண்டும்....
               பெண்ணின் குடும்ப‌த்தைப் பைய‌னின் குடும்ப‌த்துக்குப் பிடிக்க‌ வேண்டும்...."


இதுதான் கான்செப்ட் என்று புத்த‌க‌த்தின் அட்டைப்ப‌ட‌த்திலேயே ஸினாப்ஸிஸ் இருக்கும்!


டைட்டில்.... அட்டைப்ப‌ட‌ம்.....ம‌ற்றும் இந்த‌ ஸினாப்ஸிஸ் விள‌க்கும் க‌தைக்க‌ள‌ம்.... இந்த‌ மூன்றின் புரிதலுடன் அப்படியே முத‌ல்ப‌க்க‌துக்குப் போகவைத்து நேரடியாகக் கதையை ஆரம்பித்துவிடுவதே புத்திசாலித்த‌ன‌ம்....!
 

மாறிவரும் வாசகத் தேவைக்கு ஏற்றாற்போல் எளிமையான கதையமைப்பில் பளிச் பளிச் விஷயங்களை முன்னும் பின்னும் அடுக்கிவைத்து சின்னதொரு கதையை எடுத்துச்சொல்லி ஜெயிப்பதில் மீண்டுமொருமுறை நிரூபித்துத் தன்னுடைய டைனமிக்கான‌ வாசகவட்டத்தைத் தக்கவைத்தது மட்டுமின்றி ஒரு க்ளீன் ஸ்வீப்பாக அதன் விட்டத்தையும் விரிவாக்கிக் கொண்டிருக்கிறார் "2 ஸ்டேட்ஸில்" சேத்தன் பகத்!


வ‌ழ‌க்க‌ம்போல‌ இதுவும் அவரின் வாழ்க்கை அனுப‌வத்தை ஒட்டியக கதைதான்.... அவ‌ர‌து திரும‌ண‌த்தின் க‌தை இது! ஐஐடி மற்றும் ஐஐஎம்(ஏ)யில் ப‌டித்த‌ "பெருந்த‌லை" அவ‌ர்!! ந‌ம‌க்கெல்லாம் "எண்ட்ரென்ஸ் எக்ஸாம்" என்னும் கடும் வலிமையான சுவ‌ரைத் தாண்டி மூச்சுக் காற்றுகூட‌ உள்நுழைய‌முடியாத‌ க‌ன‌வுதேச‌த்தை அதன் க்ளாஸ்ரூம் சூழ‌ல்முத‌ல் கேண்டீன் சாம்பார் வரை, சேத்தனின் புண்ணியத்தில் ஸ்பெஷல் ப‌ர்மிஷ‌னில், உள்ளே ஒரு கேம்ப‌ஸ் டூர் அடிக்க‌வைத்து .... லவ் பணணும் ஐஐஎம் எம்.பி.ஏக்களான‌ க்ரிஷ் ம‌ற்றும் அந‌ன்யாவோடு நம்மையும் அவர்களின் க்ளாஸ் மேட்டாக உலவவிடும் ஆர‌ம்ப‌த்து சுவாரஸ்ய‌ அத்தியாய‌ங்க‌ள்!!


இந்தியா என்ப‌து ஒரே நாடு என்று நாம் ந‌ம்பிக்கொண்டிருப்ப‌தெல்லாம் பி.எஸ்.என்.எல்லின் ஒன் இந்தியா ப்ளான் ப்ரோம‌ஷ‌னுக்காக‌த்தான் என்று அடுத்த‌ நான்கைந்து அத்தியாய‌ங்க‌ளில் தெளிவாகப் புரியவைத்துவிடுவார்!! "வெளிநாட்ட‌வ‌ர்" என்றால் என்ன‌தான் வேற்று கலாச்சார‌ ஒவ்வாமை இருந்தாலும் குறைந்த‌ப‌ட்ச‌ம் ஒரு க‌வ‌ர்ச்சியாவ‌து மிச்ச‌ம் இருக்கும் ஆனால் வ‌ட‌ இந்தியாவைச் சேர்ந்த‌ ஒரு ஆர்தொடாக்ஸ் பஞ்சாபிக் குடும்ப‌ம் ஒரு த‌மிழ்நாட்டுப் பெண்ணை ரேட் ப‌ண்ணும் வித‌த்தைப் ப‌டிக்கும்போதுப் புஜ‌ங்க‌ள் துடிக்க‌லாம் ந‌ம்ம‌வ‌ர்க‌ளுக்கு!! ஆனால் அவற்றையெல்லாம் சேத்த‌ன் ய‌தார்த்த‌மாக‌த் தான் ப‌திந்திருக்கிறார்! சென்னைப் பொண்ணு அந‌ன்யா க‌தைப்ப‌டி ப‌ஞ்சாபி க்ருஷ்ஷைவிட‌ சிவ‌ந்த‌ தேக‌நிற‌ம் கொண்ட‌வள்..... ஒருவேளை அப்ப‌டியில்லையென்றால் கிருஷ்ஷும் கூட‌ அவ‌ளை விரும்பியிருக்க‌மாட்டானோ என்று தோன்றிய‌து என‌க்கு!! (நிற‌வெறி என்ப‌து ஏதோ ஃபாரின் ச‌மாச்சார‌ம் என்று நினைக்காதீர்க‌ள் பாஸ்.. "ஃபேர் அண்டு ஹேண்ட்ஸம்"முக்கு ஷாருக்கானும் சூர்யாவும் மாடலாக‌ வ‌ரும் நாடு ந‌ம்முடைய‌து!!)


இருவருக்குமான‌ காதல் தோன்றும் இடம்..... ஹ்ம்ம்ம் டெக்னாலஜி ஹாஸ் இம்ப்ரூவ்ட் வெரி மச்!!..... அவ்ளோதான் சொல்ல முடியும்......... த‌லைக்கு மேல் ப‌ல்பு எறிந்து.... ஆல‌ய‌ ம‌ணியோசை கேட்டு.... ந‌ம்த‌ண‌ ந‌ம்த‌ண‌ என்று ப‌ற‌வைக‌ள் ப‌ற‌ந்து... அலைக‌ள் திகைத்து ஏற்ப‌டும் நமது க்ளாஸிக்கல் "தேய்வீக‌க்" காத‌லைப் ப‌டுசிம்பிளாக‌ "ஒரு பைய‌னையும் பெண்ணையும் போர் அடிக்கும் சில பாடப் புத்த‌க‌ங்க‌ளையும் ஓர் அறையில் குவித்துவைத்துவிட்டால் இர‌ண்டு நாட்க‌ளில் 'எல்லாம்' இய‌ல்பாய் ந‌ட‌ந்துவிடும்" என்று அலட்சியமாக சொல்லிவிட்டு ந‌க‌ர்ந்திருக்கிறார்... இந்த‌ ஏரியாவெல்லாம் பொதுவாக முன்முழியப்படும் இந்தத் தலைமுறையின் வேகம் என்று ஏற்றுக்கொள்பவர்களுக்கு உறுத்தப்போவதில்லை .... ஆனால் நாவ‌ல்க‌ளில் அழுத்த‌மான‌ ப‌திவுக‌ளைத் தேடிப் ப‌ழ‌க்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் இந்த‌ இட‌த்தில் புத்த‌க‌த்தைத் தூக்கியெறியக் கூட‌ நேர‌லாம்!! என்னைப் போல் பொழுதுபோக்குக்காக‌ப் ப‌டித்தீர்க‌ள் என்றால் காத‌ல் வ‌ந்த‌பின் இந்த‌ ஜோடி ப‌டு பாந்த‌மாக‌க் க‌ல‌ந்து அடுத்த‌டுத்து அலைமோதிக் காத‌லில் ஜெயிக்க‌ப் ப‌டும்பாடுக‌ளில் நிச்சியம் ஸ்கோர் செய்டுவிடும்.... அந்நேரம் வாச‌க‌னின் பேஜ் ந‌ம்ப‌ர் ஸ்கோரும் அலட்டிக்கொள்ளாமல் செஞ்சுரியைத் தாண்டியிருக்கும் !!


யெஸ்...யெஸ்... ஜ‌ஸ்ட் இது ஒரு "லைட் ரீடிங்" வகைப் புத்தகம்தான்! (Light Reading)


ஒட்டுமொத்த‌ இந்திய‌ மாண‌வ‌ர்க‌ளின் க்ரீமி லேய‌ரான‌ ஐஐஎம்(ஏ)வில் கேம்ப‌ஸ் நேர்முக‌த்தேர்வுக‌ள் எப்ப‌டி ந‌ட‌க்கும் என்று அங்கே ப‌டித்த‌வ‌ர்க‌ள்தான் சொல்ல‌வேண்டுமல்லவா.... மனிதர் ப‌ட‌ம்பிடித்துக் காட்டியிருப்பார்!! அந‌ன்யா ப‌த‌ற்ற‌மாக இண்டர்வியூவில் 'ப்ளேஸ்' ஆவ‌தும்... க்ரிஷ் இன்றைய‌ இளைஞ‌னின் பிர‌திப‌லிப்பாக‌க் க‌வ‌ர்ச்சி ச‌ம்ப‌ளத்தை மட்டுமே குறிவைத்து, காஷுவ‌லாக‌ "சேல‌ரி சாம்பிய‌ன்" (Salery Champion) சிட்டி பேங்கில் வேலைவாங்குவான்.... அவ‌ர‌வ‌ர் விருப்ப‌ப்ப‌டி வேலைபார்க்கும் இட‌த்தைத் தேர்வு செய்துகொள்ள‌ ஆர‌ம்பத்தில் கிடைக்கும் வாய்ப்பில் அந‌ன்யாவுக்காக‌ இந்த "மைதா மாவுப் பைய‌ன்" சென்னையைத் தேர்வு செய்து ந‌ம்ம‌ ஏரியா ஆட்டோக்கார‌னிட‌ம் ஆங்கில‌த்தில் க‌ப‌டி ஆடுவ‌தில் சூடுபிடிக்கும் க‌தை.... ஜ‌ன‌நாய‌க முறையில் பிள்ளைகளை வளர்க்கும் மேல்த‌ட்டுத் தமிழ்க்குடும்பம் தன் மகளின் இந்த அந்நியக் காத‌லின் அஜீர‌ண‌த்தை மெல்ல‌வும் முடியாது விழுங்க‌வும் இயலாத‌ த‌விப்பை சுவார‌ஸ்ய‌க் கிரியாஊக்கியாக‌வே க‌தைக்குப் ப‌ய‌ன்ப‌டுத்தியிருப்ப‌து சேத்த‌னின் சாம‌ர்த்திய‌த்துக்கு வெற்றிக‌ர‌மான‌ ஆஸிட் டெஸ்ட்!


வேலையில் மேனேஜ‌ரின் த‌வ‌றுக்குத் தான் பொறுப்பேற்று அவ‌மானப்ப‌டுவ‌து... அதிகாலையில் அந‌ன்யாவின் த‌ம்பிக்கு ஐஐடி நுழைவுத்தேர்வுக்கு ட்யூஷன் எடுத்து.... அவ‌ள் அப்பாவின் ஃபிய‌ட் காரில் 'ஊர்ந்து' வேலைக்குப் போய்... மாலையில் நேஷ‌ன‌லைஸ்ட் பாங்கில் வேலைபார்க்கும் அதே தன் வ‌ருங்கால‌ மாம‌னாருக்கு ப‌வ‌ர்பாயிண்டில் ப்ரெஸ‌ண்டேஷ‌னுக்கு உத‌வி... ந‌ல்ல‌தொரு பெய‌ரை வாங்க க்ரிஷ் தன் காதலுக்காகத் த‌ன் முதுகெலும்பை வ‌ளைப்ப‌து க‌தையை வேக‌மெடுக்க‌ வைத்தாலும் அநண்யா தன் காதலில் அசராமல் காட்டும் த‌ளராத‌ உறுதிதான் புத்த‌க‌த்தை ந‌ம் கையோடு ஒட்ட‌வைத்திருக்கும்! எடுத்த முடிவில் தெளிவாகத் தன் கட்டங்களுக்குள் அழகாக‌ நகரும் ஹீரோயின் ஒரு "சூப்பர் காதலி" கதையில் க்ரிஷ்ஷைவிட நிஜத்தில் சேத்தனுக்கு!!


சிட்டி பேங்க் ந‌ட‌த்தும் ஒரு கான்செர்ட்டில், ஆரம்பத்தில் தன் மேனேஜரின் பிழைக்குத் தான் சிலுவை சுமந்ததை வைத்துக் கட்டம்கட்டி, எஸ்பிபி மற்றும் ஹ‌ரிஹ‌ர‌னுட‌ன் அந‌ன்யாவின் அம்மாவை மேடையேற்றிப் பாட‌வைப்பான் கிருஷ்... செம்மையான‌ க‌ட்ட‌ம் அது க‌தையில்! எப்படியோ அங்குமிங்கும் அலைந்தோடி தெற்கில் ஸீட்டைப் பிடித்த‌பின் வ‌ட‌க்கே தன் வீட்டில் ஆதரவு வாங்க க்ருஷ், ப‌ஞ்சாபுக்கு அந‌ன்யாவை அழைத்துச் சென்ற‌பின்பு க‌தை கொஞ்ச‌ம் ட‌ல்ல‌டித்தாலும் அதன்பின் எல்லா அத்தியாய‌ங்களையுமே மிக‌மிக‌ சுருக்க‌மாக‌க் க‌ச்சித‌மாக‌ அமைத்து கில்லாடித்த‌ன‌மாக‌த்தான் ந‌க‌ர்த்தியிருப்பார் இந்த‌ ஐஐடி பாஸ் அவுட்!


ஒரு க‌ட்ட‌த்தில் த‌ன் அம்மாவை ச‌ம்ம‌திக்க‌ வைப்ப‌த‌ற்காக‌ ஒரு திட்ட‌த்தை க்ருஷ் விள‌க்க‌ எதிர்பாராத‌வித‌மாக‌ அந‌ன்யா அதைக் கேட்டுவிட்டு இடிந்துபோய் ந‌டையைக் க‌ட்ட அதுவ‌ரை த‌ளாராத‌ காத‌லில் விரிசல் விழுந்து க‌தையை அடுத்த‌ ட்ரெயினில் ஏற்றிவிட ... வ‌ழ‌க்க‌மாக‌ தாடி..டிப்ர‌ஷ‌ன் என்று சுற்றினாலும் க்ருஷ்-அந‌ன்யாவின் "காத‌ல்" அந்த‌க் க‌ட்ட‌த்தில்தான் ஆழ‌ம்காட்டும்... அத‌ற்குள் நாம் ஓர‌ள‌வு க‌தையின் சுவார‌ஸ்ய‌த்துட‌ன் ஒன்றிப்போய்விடுவ‌தால் த‌ட‌ த‌ட‌ த‌ட‌ வென‌ அடுத்த அடுத்த‌ ஸ்டேஷ‌னுக்குள் நுழைந்துவிடுவோம்!!!


ஒரிஜின‌ல் ர‌ம்மி சேர்ந்த‌பின்புதானே "சீக்ரெட் ஜோக்க‌ர்" என்ன‌வென்று தெரியும்! அப்ப‌டி வ‌ருவ‌துதான் ஏற்கென‌வே க‌தையில் ஒரு வேஸ்ட் வில்ல‌னாக‌ க்ருஷ்ஷின் சீட்டுகளில் ஒளிந்திருந்த‌ அவ‌ன‌து அப்பா பாத்திர‌ம்... அவ‌ரே திடீரென்று துருப்புசீட்டாக உருவெடுத்து அடுத்த‌டுத்து இர‌ண்டு ட‌ம்மி செட்டுக்கும் வ‌ழிவ‌குக்கக் காத‌ல்க‌தை வெற்றிகரமாக "டிக்" அடிக்க‌.... க‌ல்யாண‌ அத்தியாயம் க்ளைமேக்ஸ் ப‌ர‌ப‌ர‌ப்புக‌ளின்றி வெறும் க‌லாச்சார‌ சுவார‌ஸ்ய‌ங்கள் ம‌ட்டுமே நிரைந்து த‌கிட‌ த‌கிட‌ த‌கிட‌ வென‌ த‌திங்கின‌த்தோம் போட்டு முடியும் கதை, க்ருஷ் கெட்டிமேள‌த்துட‌ன் அந‌ன்யா க‌ழுத்தில் மூன்று முடிச்சு போட‌!!!


ப‌டு திருத்த‌மாக‌க் க‌தை சொல்கிறார் எக்ஸ்பிர‌ஸ் வேக‌த்தில்.... இந்த‌த் த‌லைமுறையின் மோஸ்ட் வாண்டெட் இண்டியன் ரைட்டராகச் சேத்த‌ன் ப‌க‌த் பிர‌ச்னையின்றித் தொட‌ர்வ‌தில் அதிக‌ ஆச்ச‌ர்ய‌ம் ஏற்படாது இர‌ண்டு அத்தியாய‌ங்க‌ளைப் ப‌க்க‌ம் திருப்பிய‌தும்! ஒரு மெலோ டிராமா திரைக்க‌தையை நாவ‌லாக்கி ப‌டுஸ்லிம்மாக‌க் கைக‌ளில் த‌வ‌ழ‌விட்டு.... ம‌ன‌ம்போன‌ போக்கில் எங்குமே உல‌விடாது க‌தை போகும் போக்கையே க‌ண்கொத்திப் பாம்பாக‌த் த‌வறாது தடம்புரளாது இழுத்துச் சென்று முடித்து ஜெயித்திருக்கிறார் ஒரே ஸ்பீடில்!!


சும்மா காஷுவ‌ல் ரீடிங்காக‌த் தான் உணர்ந்தாலும்... க‌தை முழுக்க‌ நிர‌ம்பியிருக்கும் ச‌ந்தோஷ‌மும்.... ய‌தார்த்த‌மாய்த் த‌ழும்பியிருக்கும் குழ‌ப்ப‌மில்லாத‌ காத‌லும்.... அத்துமீறாத‌ உற‌வுக‌ளும்.... அட‌ம்பிடிக்காத‌ சொந்த‌ங்க‌ளும்.... என்று வாசித்து முடிந்த‌வுட‌ன் ஒரு ஸ்மூத்தான‌ உண‌ர்வு ம‌ன‌தை வ‌ருடிக்கொடுக்கும் ஒரு நிறைவை ம‌ன‌து உண‌ரும்..... ந‌ல்ல‌ க‌தை!!!


இந்தியாவின் ஒவ்வொரு ஸ்டேட்டிலும் ஜனம் வேறுபட்ட ஸ்டேட் ஆஃப் மைன்டில் இருந்தாலும் இங்கே ஒரு காத‌ல் என்னும் "ட்ரூ ஸ்டேட்மெண்ட்" த‌ன் ட்ரூத்தைத் தெளிவாக நிரூபித்து நின்று ஆடி ஜெயித்து ஒரு "ஸ்டேட் ஆஃப் தி ஆர்ட்" நாவ‌ல் என்று இதைத் த‌ர‌முய‌ர்த்திக் காட்டியிருப்பது க‌ண்கூடு.... ச‌பாஷ் சேத்த‌ன்!!!!


தேர்ந்த‌ வாசிப்பைத் தொடர்பவர்கள் மென்மையான இந்திய ஆங்கிலத்தில் எளிமையாகக் கதைசொல்லும் சேத்தனை நிச்சிய‌ம் டிக் செய்வார்க‌ள் என்றுதான் நினைக்கிறேன்!


அன்புட‌ன்,
பிர‌பு எம்






23 comments:

  1. நல்ல விமர்சனம் பிரபு.நான் இந்த புத்தகத்தை பற்றி எழுதியது http://amuthakrish.blogspot.com/2009/12/2.html

    ReplyDelete
  2. நன்றி அக்கா..
    உங்கள் பதிவு மிகவும் அருமை!
    ஷார்ட் அண்ட் ஸ்வீட்!!

    ReplyDelete
  3. சினிமா விமர்சனத்தில் ஒன்னு பாக்கி இருக்குனு கடுப்போட இருக்கேன் அடுத்து புத்தக விமர்சனமா? ஹலோ...நான் சொல்றது இளைஞன் படம்:)....விண்ணை தாண்டிய வெற்றி:))) னு கலைஞர் டிவி யில் போட்டுட்டே இருக்காங்க...எங்கே மக்கா அந்த படத்தோட விமர்சனம்...? :(((

    செம கடுப்புடனும்...எரிச்சலுடனும்...:))
    உங்கள் சகோ..
    ஆனந்தி..:)))))

    ReplyDelete
  4. "இளைஞன்" விமர்சனம் தானே... இதோ உடனே பாத்துட்டு பத்து பக்கத்துக்கு விமர்சனம் எழுதி உங்களுக்கு மட்டும் மெயில் பண்ணிடவா சகோ!!! :)))

    ஆமா அதென்ன "விண்ணைத்தாண்டிய வெற்றி" படம் செவ்வாய் கிரகத்துல மட்டும் வெற்றிகரமா ஓடுதோ!!

    ReplyDelete
  5. Anonymous3:22 PM

    அருமையான விமர்சனம்.
    விமர்சன ந‌டை அருமை.

    ReplyDelete
  6. ரொம்ப நன்றி இசைப்ரியன்...
    உங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்! :-)

    ReplyDelete
  7. தொர இங்கிலீசெல்லாம் படிக்குது!!!!!!
    :-)))))))

    ReplyDelete
  8. :‍-)))
    நன்றி ஸ்ரீ அண்ணா....

    ReplyDelete
  9. ஓய் சகோ...:)) சேத்தன் எழுதியது ஒரு பக்கம் இருக்கட்டும்...ஆனால் அதை இவ்வளவு ரசிச்சு படிச்சு(நீங்க சொன்ன மாதிரி அது லைட் ரீடிங் ஆ தெரியல..டீப் ரீடிங்..:)) )அழகா ப்ரெசென்ட் பண்ணியது இன்னும் அழகாய் இருந்தது...அனேகமா சேத்தன் கூட இதை படிச்சால் அட !..நம்ம எழுதினது இவ்வளவு நல்லாவா இருக்குன்னு இன்னும் ஆச்சர்ய படலாம்...க்ரிஷ் கதாபாத்திரத்தை விவரிச்சதிலும்...அனன்யாவின் காதலின் பாங்கை ரசிச்சு சொன்னதும் க்ளாஸ்...

    ReplyDelete
  10. அதுவும் முன்னோட்டமா சொன்ன அந்த paragraphs பூராவும் செம...:) அதுவும் அந்த bsnl தத்துவம்:))

    //ஒருவேளை அப்ப‌டியில்லையென்றால் கிருஷ்ஷும் கூட‌ அவ‌ளை விரும்பியிருக்க‌மாட்டானோ என்று தோன்றிய‌து என‌க்கு!! (நிற‌வெறி என்ப‌து ஏதோ ஃபாரின் ச‌மாச்சார‌ம் என்று நினைக்காதீர்க‌ள் பாஸ்.. "ஃபேர் அண்டு ஹேண்ட்ஸம்"முக்கு ஷாருக்கானும் சூர்யாவும் மாடலாக‌ வ‌ரும் நாடு ந‌ம்முடைய‌து!!)//

    இது செம நச்...

    ReplyDelete
  11. அனேகமா இது மாமுல் கதை தான்..நம்ம ஊரு போங்கு படங்கள் டைப் தான் என்றாலும்...சின்ன சின்ன சுவாரஸ்யங்கள்( மாமனார்,மச்சினன்,மாமியார் ஐ கவுத்தும் இடங்கள் ) எல்லாம் நீங்கள் விவரித்த பாணி டக்கரு சாமி..டக்கரு...:))

    நல்ல விமர்சனம் பண்ற அளவுக்கு ஸ்ட்ரோங் stuff இருக்கு சகோ உங்களுக்கு...:))) குட் அண்ட் வெரி குட்..:)))))))))))))))))))

    ReplyDelete
  12. தரமான விமர்சனம்.

    ReplyDelete
  13. //ஓய் சகோ...:)) சேத்தன் எழுதியது ஒரு பக்கம் இருக்கட்டும்...ஆனால் அதை இவ்வளவு ரசிச்சு படிச்சு(நீங்க சொன்ன மாதிரி அது லைட் ரீடிங் ஆ தெரியல..டீப் ரீடிங்..:)) )அழகா ப்ரெசென்ட் பண்ணியது இன்னும் அழகாய் இருந்தது...அனேகமா சேத்தன் கூட இதை படிச்சால் அட !..நம்ம எழுதினது இவ்வளவு நல்லாவா இருக்குன்னு இன்னும் ஆச்சர்ய படலாம்...க்ரிஷ் கதாபாத்திரத்தை விவரிச்சதிலும்...அனன்யாவின் காதலின் பாங்கை ரசிச்சு சொன்னதும் க்ளாஸ்... //

    நன்றி சகோ!! :))

    ReplyDelete
  14. //இது செம நச்... //

    உண்மைதான் சகோ நார்த் இண்டியா சௌத் இண்டியாக்குள்ள நிறவெறி நிச்சியமா இருக்கு.... அது கவலைக்குரிய உண்மை....

    ReplyDelete
  15. //நல்ல விமர்சனம் பண்ற அளவுக்கு ஸ்ட்ரோங் stuff இருக்கு சகோ உங்களுக்கு...:))) குட் அண்ட் வெரி குட்..:))))))))))))))))))) //

    ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி அன்புசகோ!!! :))) தேங்க்யூ ஸோ மச்!!!! :)

    ReplyDelete
  16. //தரமான விமர்சனம்.//

    ரொம்ப நன்றி மாமா...

    ReplyDelete
  17. //சும்மா காஷுவ‌ல் ரீடிங்காக‌த் தான் உணர்ந்தாலும்... க‌தை முழுக்க‌ நிர‌ம்பியிருக்கும் ச‌ந்தோஷ‌மும்.... ய‌தார்த்த‌மாய்த் த‌ழும்பியிருக்கும் குழ‌ப்ப‌மில்லாத‌ காத‌லும்.... அத்துமீறாத‌ உற‌வுக‌ளும்.... அட‌ம்பிடிக்காத‌ சொந்த‌ங்க‌ளும்.... என்று வாசித்து முடிந்த‌வுட‌ன் ஒரு ஸ்மூத்தான‌ உண‌ர்வு ம‌ன‌தை வ‌ருடிக்கொடுக்கும் ஒரு நிறைவை ம‌ன‌து உண‌ரும்..... ந‌ல்ல‌ க‌தை!!!////

    இந்த ஒத்த பாராவில் மொத்த கதை.. கருவும்.. சொல்லிட்டீங்க.. ஒவ்வொரு விசயமும், கவனித்து, ரசிச்சு, படிச்சிருக்கீங்க.. பிரபு..

    அதை ஒன்று விடாமல் எங்களுடன் பகிர்ந்து கிட்டீங்க.. ரொம்ப நன்றி.. :-))

    ReplyDelete
  18. @ அன்புடன் ஆனந்தி

    ரொம்ப நன்றிங்க :-)

    ReplyDelete
  19. பிரபு புத்தகத்தைத் தேடி வாசிக்கத் தூண்டும் விமர்சனம்.இன்னொன்றும் சொல்லலாமே... ஒருத்தரை ஒருத்தர் பிடிக்காவிட்டாலும் எங்கள் சமூகத்தில் சாதகம் பொருந்திவிட்டால் திருமணம் செய்து கொடுக்கும் கொடுமை !

    ReplyDelete
  20. செம விமர்சனம்

    ReplyDelete
  21. நன்றி ஹேமா அக்கா :)

    //ஒருத்தரை ஒருத்தர் பிடிக்காவிட்டாலும் எங்கள் சமூகத்தில் சாதகம் பொருந்திவிட்டால் திருமணம் செய்து கொடுக்கும் கொடுமை ! //

    இது ரொம்ப டேஞ்சராச்சே! :)

    ReplyDelete
  22. //ஆமினா said...
    செம விமர்சனம் //

    ரொம்ப நன்றி சகோ! :)

    ReplyDelete

வருகைக்கும் வாசிப்புக்கும் ரொம்ப நன்றி... உங்க கருத்தையும் சொல்லலாமே.. :-)