முந்தைய பாகங்களுக்கு இங்கே சொடுக்கவும்...
பாட்டி கதை (பாகம் 7)
23
"பாட்டியம்மா.... பாட்டியம்மா... டிக்கெட் எடுத்தாச்சா??? பாட்டீ.... பாட்டியம்மா!!"
பஸ் கண்டெக்டர் தொடர்ந்து அழைக்கத் திடுக்கிட்டுத் திரும்பினார் பேருந்தில் ஜன்னலோரம் அமர்ந்து வெளியே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த பாட்டி....!! கை நடுங்க சுருக்குப் பையிலிருந்து பணமெடுக்கத் தடுமாறியதைக் கவனித்த சுற்றியிருந்தவர்கள்...
"கூட யாரும் வரலியாம்ம்மா??"
என்று விசாரிக்கத் துவங்கினார்கள்.... கொஞ்சம் குடிக்கச்சொல்லிப் பாட்டிக்குத் தண்ணீர் கொடுத்தார்கள்...
தன் மஞ்சள்பையின் கைப்பிடியைத் கையில் பிடித்துத் திருகிக்கொண்டே வந்தார் பயணம் முடியுமட்டும் பதற்றத்தின் வெளிப்பாடாய்... நல்லவேளை அதிக தூரமில்லை..... மிகுந்த தயக்கத்துடன் தனியாக இறக்கிவிட்டார்கள் பாட்டியம்மாவை அவர் கிராமத்தில்.... உச்சிவெயிலில் உடல்வியர்த்தப் பாட்டிக்கு வீடுபோய் சேர்ந்துவிட்டால்போதுமென இருந்தது..... மளிகைக்கடைக்காரர் சண்முகம் தன் டிவிஎஸ்50 யில் எங்கோ சென்றுகொண்டிருந்தார் அந்த வழியாக.... மூச்சிரைக்க நகர்ந்து கொண்டிருந்த பாட்டி உதவிக்கு அழைப்பதை உணர்ந்தவர்.... அருகில் சென்றார்..... நிலையைப் புரிந்து வேகமானவரிடம் வேறெதுவும் வேண்டாம்... வீட்டுக்குச் செல்லமட்டும் தனக்கு உதவுமாறு கெஞ்சிக் கேட்டுக்கொண்டார் பாட்டி... பாட்டி சொல்லை மீறமுடியாமல், பின்னால் அமர்ந்திருந்த கடைப்பையனை இறக்கிவிட்டு பாட்டியைத்தன் கடைக்கு அழைத்துச்சென்று ஒரு சோடா வாங்கிக்கொடுத்துக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திவிட்டுதான் வீட்டில் இறக்கிவிட்டுச்சென்றார் சண்முகம்....
24
பூட்டியிராத வீடு சில நாட்கள் பூட்டிக்கிடந்ததால் பாட்டிவீட்டுத் தரையில் தூசித்திரைக் காலை நமநமத்தது பாட்டிக்கு.... வீடு வந்து சேர்ந்ததாகிவிட்டது பாட்டிக்கு!! அதே சிரிப்புடன் தாத்தா சுவரில் போட்டோவில் "வெல்கம் பேக்" சொல்லி வரவேற்றார் பாட்டியை.... பாட்டியின் கண்கள் கலங்கிய்தால் பார்வை மேலும் மங்கலானது....
பெருமூச்செறிந்து வீட்டுமையத்தில் தரையில் அமர்ந்தார் பாட்டி.... கணவர் கட்டிய, தங்கள் வாழ்க்கையை ஆரம்பித்த, வீட்டுத் தூணில் முதுகைச் சாய்த்து!! புடவைத்தலைப்பால் முகத்தின் வியர்வையை ஒற்றி எடுத்தார்..... சுவரில் சாய்ந்து சிறிது நேரம் களைப்பாற முயற்சித்தார்..... "போகிற உயிர் இந்த அரவணைப்பில் போகவேண்டுமென்றுதானே இத்தனைக்காலம் அடம்பிடித்திருந்தேன்!!!" என்று மனம் சொல்லியிருக்கும் போல வியர்த்துக் களைத்து ரொம்பவே அசௌகரியமாக உணர்ந்தார் தனிமையில்....
இன்னும்கூட காதுகளில் கார்களின் என்ஜின் சத்தம் இரைந்துகொண்டுதான் இருந்தது..... ஏதோவொரு படபடப்பு மார்புக்குள்..... தன் செய்கையைப் பேரன் இந்நேரம் அறிந்திருப்பானா???? என்ற எண்ணம் அதீதமான அழுத்தத்துடன் இரத்ததை நரம்புகளுக்குள் செலுத்தியது...... தனக்கு ஏதோ நிகழப்போகிறது என்று அறிந்துவிட்ட பாட்டியம்மா.... இளைப்பாறக் கொஞ்சம் கடுங்காப்பியில் சுக்கு தட்டி அருந்தலாம் என்று அடுப்பங்கரைக்குத் தட்டுத்தடுமாறி எழுந்து சென்றார்..... சட்டியில் நீரைவார்த்து சுக்கு தட்டிப்போட்டு அடுப்பில் வைத்தவருக்கு கிறுகிறுத்தது தலை.... தலைக்குமேலே விட்டத்தில் கரிபிடித்த சுவர் கார்ஷோரூமில் அண்ணார்ந்து பார்த்த ஒளிவிளக்குகளால் அடுக்கப்பட்ட மேல்சுவர் போல் தோற்றமளித்தது பாட்டியின் தலை சுற்றிய பார்வைக்கு..... சுவரில் சாய்ந்துகொண்ட பாட்டியம்மாவுக்கு சரியாக இதயத்திலேயே கணமாக ரீங்கரித்து விழுந்தது வீட்டுவாசலில் அடித்த அந்த ஹைடெசிபல் கார் ஹாரன் சத்தம்.....கால்கள் நடுங்கத்துவங்கின பாட்டியம்மாவுக்கு.... வாசலிலேயே கார் நிறுத்தப்படுகிறது....
25
"பாட்டிம்ம்மா........."
அன்பான துடிப்போடு வீட்டிற்குள் பாட்டியைத் தேடும் ஜீவாவின் குரல்..... பாட்டியின் காதுகளைச் சென்றடைய..... வீட்டுக்குள் சமையலறையில் ஜீவா திடீரெனத் தோன்றி நிற்கிறான் கிருகிருத்துக்கொண்டிருக்கும் பாட்டியின் பார்வைக்கு எதிரே.....
சொல்லாமல் கொள்ளாமல் வந்துவிட்ட தன்னைத் தேடிவந்திருக்கும் பேரனைப் பார்த்துப் பெரும்பதற்றம் கொண்டார் பாட்டி..... கையிலிருந்த சட்டியைப் பொத்தென்றுத் தரையில் போட்டு பேரனைப் பார்த்து பயந்துபோன பாவனையில் வாய்க்குழறத் துவங்கினார்.....
செயலிழந்த ஜீவா, ஒருகணம் செய்வதறியாது திகைத்து நின்றாலும்...... சற்றும் தாமதிக்காமல் வேகமாக முன்னேறி அப்படியே ஆதரவாய்த் தன் உடலோடு அரவணைத்துக்கொண்டான் பதறும் பாட்டியை!!!!
நிலைகுலையத் துவங்கியிருந்த தன் கம்பீரப் பாட்டியைத் தன்னோடு இறுக்கமாக அணைத்துக்கொண்டு தலையை வருடிக் கொடுத்த ஜீவாவிடம்...
"பாட்டிய மன்னிச்சுருப்பா... மன்னிச்சிடுப்பா"
என வாய்க் குழறிச் சொல்லிக்கொண்டேயிருந்தார் உஷ்ணம் தணியாமல்..... படுவேகமாய்ப் பட பட பட வெனக் கலவரமாய் அதிரும் பாட்டியின் இதயத்துடிப்பை அந்த அணைப்பிலேயே உணர்ந்தான் ஜீவா.... பாட்டியின் உடல்நிலையை மிகவிரைவில் புரிந்துகொண்டவன் செய்வதறியாத திகைப்பையும் பதற்றத்தையும் கட்டுப்படுத்திக்கொண்டு தன் அரவணைப்பில் இருக்கும் பாட்டியின் காதுக்குள் ரகசியமாய்....
"பாட்டிம்மாவை நான் எதுக்கு மன்னிக்கனும்??? என் பாட்டிதான் எந்தத் தப்பும் செய்யலையே..... நான்தான் தப்பு செய்யப்போனேன்...... கோபம் இருந்தாதானே மன்னிக்கனும்.... எனக்குதான் கோபமே இல்லையே.... சத்தியமா எனக்குக் கோபமே இல்லையே.... "
என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டே பேரன், அழுத்தமாய் சீரான இடைவெளியில் தலையை வருடிக்கொடுத்துக் கொண்டேயிருக்க..... நதியலைபோல் நிதானமாகத் துடித்திடும் பேரனின் இதயத்தை அதே அணைப்பிலேயே இப்போது பாட்டியம்மா உணர்ந்தார்.... நடுங்கிய கைகள் தன் பேரனின் தோள்களை முடிந்தவரை இறுக்கமாகப் பற்றிக்கொள்ள.... அதிரடித்துத் துடித்துக்கொண்டிருந்த இதயம் சாந்தியடைத்துவங்கியது.......
மெதுவாக....மெதுவாக இதோ இப்போது இரண்டு இதயங்களும் ஒரே வேகத்தில் துடிக்கின்றன!!! இயல்பு நிலையை அடைவார் என்று பாட்டி நினைத்திருக்கவில்லை.... படபடப்பின்றிக் கண்கள் தெளிந்த நேரம், ஜீவாவுடன் வந்திருந்த அஞ்சலி சுடசுடக் காஃபி கொடுத்தாள்.... பாட்டியம்மாவுக்கு!!
26
அஞ்சலியின் காஃபியை நிதானமாகப் பருகிய பாட்டியம்மாவுக்கு வாசலில் நின்றுகொண்டிருந்த புதுக்காரைக் காட்டினார்கள் ஜீவாவும் அஞ்சலியும்....!
"முதன்முதல்ல குலசாமி கோயிலுக்குத்தான் போகணும்னு கிளம்பி வந்திருச்சு பாத்தீங்களா உங்க பேரனுக்கு நீங்க வாங்கிக்கொடுத்த கார்!!!....."
கண்சிமிட்டினான் ஜீவா.....
"நீயும் தாத்தாவும் தான் எங்களுக்குக் குலசாமி.... வேற யாரும் இல்ல எங்களுக்கு உலகத்துல...... உம்மேல போய் நான் கோபப் படுவேனா பாட்டிம்மா!!!! எனக்கு பாட்டியும் வேணும்... பாட்டிவீடும் வேணும்.... பாட்டி நீங்க இங்க இருந்தாதானே எனக்கு பாட்டிவீடு னு ஓர் இடம் உலகத்துல இருக்கும்.... நானும் ஆசைஆசையா வந்துபோறதுக்கு!!.... நீங்க எனக்கு வேணும் பாட்டிம்மா... நீங்க ரொம்ப நாளைக்கு வேணும்...சந்தோஷமா வேணும்... எனக்கு அதுமட்டும்தான் வேணும்!!"
எப்படியோ கூறிமுடித்தான் அதிகம் பேசிப் பழகியிருக்காத ஜீவா மனம்விட்டுத் தன் பாட்டியிடம்....
மெல்ல மெல்ல மெல்ல பாட்டி இப்போது Back to Form!!!! :-)
பேரனுக்கும் அஞ்சலிக்கும் காருக்கும் சுற்றிப்போட்டுத் திலகமிட்டுத் தாத்தா படத்துக்கும் தீபமேற்றி...
"குலசாமி கோவிலுக்குப் போயிட்டு வீட்டுக்குப் போங்கப்பா!!" என்று வெகுசிரத்தையாய் விடைகொடுத்தார் பாட்டிம்மா தன் பேரனுக்கும் தனக்கும் பேத்தியாகிவிட்ட அஞ்சலிக்கும்....!
27
புதுக்காரில் ஜீவா பயணம் துவங்க... ரோடு முடியும்வரை பாட்டிக்குக் கையசைத்து விடைபெற்ற அஞ்சலி... திடீரென ஜீவாவிடம்,
"எப்படி பாட்டி இவ்வளவு கரெக்டா நம்ம ரெண்டு பேருக்குமே பிடிச்ச காரை செலக்ட் பண்ணிக் கொடுத்தாங்க????"
என்று கேட்டாள்....
ஜீவா ஒருகணம் புன்னகைத்துவிட்டு.....
"அதான் பெரியவங்க... அவங்களுக்கு எப்பவுமே தெரிஞ்சிருக்கும்போல நம்ம விருப்பு, வெறுப்பு, தேவை, ஆசை யெல்லாமே!! நம்மளும் பாட்டி- தாத்தா ஆனப்புறம்தான் புரியும்னு நினைக்கிறேன் அந்தப் பாசம்!!!"
என்று கூறிச் சிரித்தான் காரை ஓட்டிக்கொண்டே......
முன்னதாக ஜீவா வேலைக்குப் போயிருந்த நேரத்தில் பாட்டி அஞ்சலியிடம் சென்று.....
"அம்மாடி...நீயாவது புரிஞ்சுக்கோடா என் கண்ணு.... உலகம் தெரியாம இந்தக் கிழவி அவங்க தாத்தா வெச்சிருந்த அம்பாசிடர் காரையே வாங்கிடுப்பானு சொல்லிட்டேன்..... அதுக்காக நான் சொல்லுற காரைத்தான் வாங்குவேன்னு பிடிவாதமா இருக்கான்மா என் பேரன்.... நான் கிழவிம்மா... அந்தக்காலம்... கிராமம்... எனக்கு எதுவுமே தெரியாது.... இந்தப் பேப்பர் எல்லாம் படிச்சுப்பாத்து ஒண்ணுமே புரியலமா இந்தக்கிழவிக்கு..... சும்மா ஒண்ணு வாங்கிப்போட காரு ஒண்ணும் அஞ்சு பத்து விளையாட்டில்ல.... உன்னக் கெஞ்சிக்கேட்டுக்கிறேன் கண்ணு..... இதுல உனக்கும் ஜீவாவுக்கும் பிடிச்ச காரு எதுனு சொல்லு நான் அதையே ஜீவாகிட்ட சொல்லிடுறேன் எனக்குப் பிடிச்ச காரும் அதுதான்னு!!!"
எவ்வளவோ மறுத்தும் வேறுவழியின்றி பாட்டிக்கு பணிந்து காரைத் தேர்வுசெய்து கொடுத்த அஞ்சலி ஜீவாவிடம் இப்பொழுதும் சொல்லவில்லை இந்த ரகசியத்தை!!!
காரோட்டும் தன் வருங்கால கணவனை ஒருமுறை தலைகோதிவிட்டு "ச்சோ ச்வீட்ட்ட்" என்று அஞ்சலி சிரிக்க.... ஜீவாவும் சிரித்தான் திருப்தியாக!!!!
முற்றும்!
தொடர்ந்து வாசித்து பின்னூட்டம் கொடுத்த அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!!
Thank you So..So....Soooo Much!!! :-)
அட தொடர் கதை அருமை பிரபு..
ReplyDeleteஹாய் அக்கா :)
ReplyDeleteரொம்ப நன்றி அக்கா...
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. :)
நன்று பிறப்பு... ஒரு பதிவர் என்ற நிலையைத் தாண்டி நல்லதொரு எழுத்தாளரின் எழுத்துக்கள் போல் உள்ளன...
ReplyDeleteஎழுத்துப்பிழைக்கு மன்னிக்கவும்... பிறப்பு இல்ல பிரபு...
ReplyDeleteஅய்..... பாட்டி கார் வாங்கிய கதை/ரகசியம் கேட்டு கதையும் முடிந்தது, கத்திரிக்காயும் காய்த்தது என்று சொல்ற நேரத்துல கரெக்ட் ஆக ஊம் ...... கொட்ட வந்த இருக்கேனே..... அட, அடா.....!!!
ReplyDeleteஅடுத்த கதை, எப்போ சாரே?
ஓகே...எல்லா பாகமும் முடிஞ்சுருச்சா....இல்ல..மிச்சம்..சொச்சம் ஏதாவது இருக்கா சகோ...??
ReplyDeleteம்ம்..well !! நேத்து நைட் ஏ படிச்சுட்டேன் சகோ..கம்மேன்ட்ஸ் போட லேட் ஆய்டுச்சு...:))) ஒரு தரமான தொடர்கதை படிச்ச திருப்தி இருந்தது சகோ...செண்டிமெண்ட்,லவ்,கேர்,funny ,நெகிழ்ச்சி,மகிழ்ச்சி, இப்படி எல்லாமே கொண்டு வந்து இருந்திங்க ...நீட் ஆ இருந்தது ஸ்க்ரீன்பிளே...அதாவது நாம visualize பண்ணி பார்த்துடலாம் ஒவ்வெரு பார்ட் லையும்...ஓ..பாட்டி இப்படி இருப்பாங்க..பாட்டி வீடு இப்படி இருக்கும்...பாட்டி இந்த குழம்பு இப்படி செஞ்சு இருக்காங்க...ஜீவா,பாட்டி டிராபிக் இல் இப்படி நிக்கிறாங்க...அஞ்சலி இப்படி சிரிக்கிறாள் னு எல்லாமே பீல் பண்ண முடிஞ்சது சகோ..அந்த அளவுக்கு கதையின் சூழ்நிலை அவளவு ரசனையா இருந்தது...சும்மா பாட்டி கதையை ஊறுகா கதை பாணியில் முடிக்காமல்..இப்படி பாட்டி இருந்தால் தான் சரின்னு அந்த சரியான மனநிலையை கதை ஓட்டத்தில் தெளிவா கொண்டு வந்திங்க சகோ...இந்த ஸ்கிரிப்ட் டை அப்டியே வச்சு அட்டகாசமாய் ஒரு படம் எடுக்கலாம்...ப்ளீஸ் சகோ..காபி ரைட் பண்ணி வைங்க...நாளைக்கு ஒரு நல்ல சூழலில் நீங்களே இந்த கதையை படமாய் எடுக்கும் நிலைமையும் வரலாம்...:)) ( ஹீ..ஹீ..அப்போ நான் ஊரை விட்டே எஸ்கேப் :)) )
ReplyDeleteநானும் ஒவ்வெரு பார்ட்டிலும் கவனிச்சேன்...அங்கே இங்கே எதாவது ஒரு ameteur தனம் தெரியுதான்னு...இல்லவே இல்ல...very professional writing சகோ...சூப்பர்...வேற இதுக்கு மேலே என்ன சொல்லன்னு தெரில..தரமா எழுதிரிங்க...இதை அப்டியே follow பண்ணுங்க...குண்டக்க மண்டக்க சொதப்பினால் அருவாள் மும்பை தேடி வரும்...:)))
ReplyDeleteரொம்ப நன்றி பிரபாகரன்.. :)
ReplyDelete//அய்..... பாட்டி கார் வாங்கிய கதை/ரகசியம் கேட்டு கதையும் முடிந்தது, கத்திரிக்காயும் காய்த்தது என்று சொல்ற நேரத்துல கரெக்ட் ஆக ஊம் ...... கொட்ட வந்த இருக்கேனே..... அட, அடா.....!!!
ReplyDeleteஅடுத்த கதை, எப்போ சாரே?//
நன்றி அக்கா...
நான் பாட்டிகதையை முடிக்குறதுக்குள்ள கரெக்டா வந்துட்டீங்க அக்கா :-)
அடுத்த கதையா....?? எழுதிடுவோம்!! ;-)
ஹாய் சகோ....
ReplyDeleteரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி சகோ... :)
உங்க அருவாளுக்குப் பயந்தாவது நிச்சியம் நல்லா எழுத முயற்சி பண்ணுறேன்.... :-)
லட்சக் கணக்குல Thanks சொல்லணும் சகோ உங்களுக்கு.... For all your continous supports and comments.. SO sweet of you.. Thank you soooo much :)
பாட்டிம்மா...சொல்லும்போதே உள்ளுணர்வின் பாசம்.வீட்டுக்கு ஒரு பெரியவர்கள் இப்படி வழிகாட்டியாக இருந்துவிட்டாலே போதும் எல்லாம் சரியாக நடக்கும்.அருமையான கதை பிரபு.வாழ்வோடு ஒட்டிய கதை.பாராட்டுகள் !
ReplyDeleteரொம்ப நன்றி ஹேமா அக்கா :)
ReplyDeleteஆஹா...ஆஹா... முற்றுமா??
ReplyDeleteகதை முடியும்தருவாயில்தான் நான் உங்கள் தளத்தை பற்றி அறிந்தேன்.நேரம் கிடைக்கும் போது முழுகதையையும் வாசிக்கிறேன்.
தகவல் உலகம்
வணக்கம் டிலீப் :)
ReplyDeleteநன்றி உங்களுடைய முதல்வருகைக்கும் பின்னூட்டத்துக்கும்....
வாங்க... நம்ம தொடர்ந்து பேசுவோம்!! :)