Sunday, January 16, 2011

ஆடுகளம் [U] (2011)


இரண்டு கால் சேவல்கள் சீறியும் கீறியும் கிழித்துக்கொள்ளும் சண்டைக்களத்தின் பின்னணியில்.... அதே இரண்டு கால் மனிதர்கள் கோபமும் துரோகமுமாக அழித்துக்கொள்ளும் நிஜக்களம்தான் இந்த அழுத்தமான "ஆடுகளம்"

சேவல் படமோ அல்லது சேவல்சண்டைப் படமோ இல்லை..... முழுக்க முழுக்க சேவல்சண்டை மனிதர்கள் பற்றிய படம்!

தொழிலும் பேஷனும் (Passion) இரண்டும் வேறுவேறாக இருக்கும் மனிதர்கள் காம்ப்ரமைஸ்களுக்குப் பழகிப்போனவர்கள். ஆனால் பேஷனையே ப்ரஃபஷனாக வாழும் மனிதர்கள் மிகவும் சென்ஸிடிவ்!!.... இவர்கள் இலக்கியம் படித்தப் பக்குவப்பட்ட மனிதர்கள் அல்ல மாறாக இவர்களின் விஷமத்தனமான இன்னோஸென்ஸைச் சரியாகப் பதிவுசெய்யும் படைப்புக்களே இலக்கியங்கள்! கதைக்களத்தின் மண்ணையும் மனிதனையும் இடம் பொருள் காலம் பார்த்து கருப்பொருள் கிஞ்சிற்றும் சிதையாமல் செல்லுலாய்டில் அள்ளியிருக்கும் ஒரு "திரை இலக்கியம்" வெற்றிமாறனின் இந்த‌ப் ப‌டைப்பு!

நவீனமும் நயவஞ்சகமுமாய்ப் பணபலம் கொண்டது ரத்தினசாமியின்(நரேன்) அணி... நுட்பமும் நுணுக்கமுமாய்த் தொழிலில் தேர்ந்த கருப்பும்(தனுஷ்) துரையும(கிஷோர்)சேர்ந்த படைபலம் கொண்டது பேட்டைக்காரரின்(செயபால்)அணி... மானத்தைப் பணையம் வைத்துப்போடும் படு சென்ஸிடிவ் சேவச்சண்டைப் பந்தயத்தில் இரு அணிகளும் மூக்குரசிப் பார்ப்பது க்ளைமேக்ஸ் அல்ல!!!

 சேவல்சண்டை நுணுக்கங்களின் குலவழிப் பிதாமகர் பேட்டைக்காரர்.... சேவலும் பேட்டைக்காரரும்தான் உயிர் கருப்புக்கு! ஒவ்வொரு பந்தயத்துக்கும் சேவலைத் தேர்வுசெய்கையில் சண்டையில் நிற்காது எனத்தெரிந்துவிட்டால் சேவலை அறுத்துப்போட்டுவிடும் பெர்ஃபக்ஷனிஸ்ட் பேட்டைக்காரர்.... கருப்பு தயார் செய்யும் சேவல் பேட்டைக்காரரின் தேர்வில் தோற்றுவிட அறுத்துப்போடச் சொல்லிவிடுகிறார்..... ஆனால் தவறு சேவலுடையதல்ல, ஆங்கிலோ இந்திய அழகுப்பொண்ணு ஐரின்(தப்ஸி) மீது கருப்பு "ஐ ஆம் லவ் யூ" வாகிச் சேவலைத் தயார் செய்வதில் கவனமிழந்ததுதான் காரணம்.... சேவலைத் தன்னுயிராகக் கருதும் கருப்பு வைராக்கியமாக அந்தச் சேவலைத் தன் மொத்தத் தொழில் நுணுக்கத்தையும் உபயோகித்துத் தயார் படுத்த..... சரியான நேரத்தில் ஒரு பலப்பரீட்சையில் பேட்டைக்காரரை மீறித் தன் சேவலைக் களமிறக்குகிறான் கருப்பு.... கருப்பைத் தன் தம்பியாய்க் கருதும் துரையின் மறைமுக ஆதரவில் ரத்தினசாமி நிதானமிழந்து ஏகப்பட்ட பணம் வைத்துப் போடும் அத்தனை பந்தயத்திலும் கருப்பின் சேவல் ஆக்ரோஷமாய்ப் போராடி வெற்றி தேடித் தருகிறது..... பேட்டைக்காரரின் மீசை தப்பித்தாலும் அறுத்துப்போடச் சொன்ன கோழி ஜெயித்துக்காட்டியதில் தன் கணக்குப் பொய்த்ததைத் தன்மானக் குறைவாகக் கருதுவதன் அதிபயங்கரப் பின்விளைவுகளும் தன் கண்களைத் தன் விரல்களாலேயே மாற்றி மாற்றிக் குத்திப் பார்வை கெடுக்கும் பரிதாபமும்தான் முடிவு!

க‌ருப்பாக‌ த‌னுஷ்.... திரை ந‌டிப்பில் என்ன‌ என்ன‌ ப‌ரிமாண‌ங்க‌ளும், க‌லைச்சொற்க‌ளும் உள்ள‌ன‌வோ அத்த‌னைத் த‌லைப்பிலும் பாராட்டலாம் த‌னுஷை.... மெலிந்த‌ உட‌லில் கணகச்சித உட‌ல்மொழி, முக‌பாவ‌னைக‌ள்.... என்ன‌ வேண்டும்? என்று கேட்டு வ‌ழ‌ங்குகிறார் (இத்த‌னைக்கும் ரியாக்ஷனுக்கு டைமிங் ச‌லுகைக‌ள் கூட‌ சீன்க‌ளில் ரொம்ப‌ குறைச்ச‌ல்!)முக்கிய‌மாக‌ வ‌ச‌ன‌ வெளியீடும், மாடுலேஷ‌னும் .. த‌ன‌க்குப் ப‌ரிச்ச‌ய‌மில்லாத‌ ம‌துரைத் த‌மிழில் த‌னுஷ் காட்டியிருக்கும் ச‌க‌ஜ‌ம் அவ‌ரை "ந‌டிக‌ன்" என்று அழுத்திப் ப‌திய‌வைக்கிற‌து.....

துரையாக‌க் கிஷோர்.... ப‌ட‌த்தின் இர‌ண்டாம் நாய‌க‌ன்... நேசமும் துவேஷமும் நிமிஷக்கணக்கில் மாற்றி மாற்றிக் காட்டும் கிஷோரின் ஆட்டம் ஆடுகளத்தில் அபாரம்! கிஷோரின் பன்முக நடிப்பை வியந்து புகழ்ந்து இன்னும் பல வருடங்களுக்குத் தொட‌ர்ந்து எழுதப் போகிறோம்!

ஈழ‌க்க‌விஞ‌ர் ஜெய‌பால‌ன் ம‌ற்றும் ராதார‌வி இருவ‌ரும் சேர்ந்து உயிர்கொடுத்திருக்கும் பேட்டைக்கார‌ரின் பாத்திர‌ம்தான் க‌தையின் ஆதார மூல‌ம். ராதாரவியின் குர‌லில் ஜெய‌பால‌ன் காட்டியிருக்கும் உண‌ர்வுக‌ளும் உண‌ர்ச்சிக‌ளும் பேட்டைக்கார‌ரைப் ப‌டைத்திருக்கின்ற‌து... விஷ‌ம் க‌லந்த‌ பாலையும் வெள்ளையாக‌க் காட்டும் வில்ல‌த்த‌ன‌ம்... ஜெய‌பால‌ன், ராதார‌வி, வெற்றிமாற‌ன் மூவ‌ருக்குமே ம‌குட‌ம் பேட்டைக்கார‌ர் பாத்திர‌ம்!

த‌ப்ஸி அழ‌கு! ந‌டிக்க‌ வாய்ப்பில்லாவிட்டாலும் ஒளிரும் உத‌டுக‌ளும் அதில் முத்துப்ப‌ற்க‌ளைப் ப‌தித்துப் பேசும் த‌மிழுமாய்ப் பாத்திர‌த்தில் பொருந்துகிறார் (ந‌ல்ல‌வேளை த்ரிஷா ந‌டிக்க‌வில்லை..!) த‌ப்ஸியின் பாட்டியாக‌ ந‌டித்திருக்கும் டிகாஸ்டா (நான் கிண்ட‌ர் காட்ட‌ன் ப‌டித்த ஸ்கூலில் இவர் ப‌க்க‌த்து க்ளாஸ் டீச்ச‌ர்!) ஆங்கிலோ இந்திய‌ப் ப‌ர‌வை முனிய‌ம்மாவாய்க் கேம‌ரா முன் காஷுவ‌லாக‌த் தோன்றி ந‌டிக்கிறார்!!

வேல்ராஜ‌னின் ஒளிப்ப‌திவுக்குத் த‌னிப்ப‌திவு போட‌ வேண்டும்... ஆங்கிள்க‌ளை வெற்றிமாற‌ன் கேட்டு வாங்கியிருக்க‌லாம் என்றாலும் இய‌க்குன‌ரின் க‌ண்க‌ளாக‌ அவ‌த‌னித்து பாத்திர‌ங்க‌ளின் வேக‌த்தில் ச‌ம்ப‌வ‌ங்க‌ளின் தாக்க‌த்தை வெறும் காட்சிக‌ளாக‌ இன்றி ஒளியாகவே ப‌தித்திருக்கிறார்.... தே.கிஷோரின் ப‌ட‌த்தொகுப்பு ப‌டத்தின் உயிரை உடலோடு கோர்த்திருக்கிற‌து.... ஜிவி பிர‌காஷ் இசையில் பாட‌ல்க‌ள் அருமை ம‌ற்றும் சூப்ப‌ர்ஹிட்... அதைவிடப் படத்தின் பின்ன‌ணி இசை "யாரு இசைய‌மைப்பாள‌ர்?" என்று கேட்க‌வைத்து "ஜிவி பிர‌காஷா??" என்று திகைக்க‌ வைக்கிற‌து!! குருவித் த‌லையில் ப‌ன‌ங்காயைக் எளிமையாகத் தூக்கிச் சுமந்திருக்கிறார் ஏற்கெனவே 'வெயிலோடு விளையாடி'ய‌வ‌ர்!!

வெற்றிமாற‌னின் இர‌ண்டாவ‌து திரைப்ப‌ட‌ம்.... திரைப்ப‌ட‌ம் எடுக்கத் தேவைக்கும் அதிக‌மாக‌ மென‌க்கிட்டு எடுத்துக் கொடுத்திருக்கிறார் இந்த‌ப் ப‌ட‌த்தை.... உழைப்பு வீண்போய்விட‌க் கூடாது என்னும் எச்ச‌ரிக்கை உண‌ர்வும் இய‌க்க‌த்தில் தெறிக்கிற‌து.... த‌மிழில் ஓர் உல‌க‌த் திரைப்ப‌ட‌த்தை சாத்திய‌ப் ப‌டுத்திய‌த‌ற்கு வ‌ண‌க்க‌ங்க‌ள்.... இனி விருதுக‌ள், ச‌ர்வ‌தேச‌த் திரைப்ப‌ட‌ விழாக்க‌ள் என‌ப் ப‌ய‌ண‌ங்க‌ள் நிறைய‌ இருக்கும்!

சேவ‌ல் ச‌ண்டைக‌ள் யாவும் க‌ம்ப்யூட்ட‌ர் கிராஃபிக்ஸில் செய்ய‌ப்ப‌ட்டிருக்கின்றன‌.... நார்நியா சிங்க‌த்துக்குப் பிற‌கு என்னை உண்மையென்று நம்ப‌வைத்து ஏமாற்றிய‌வை இந்த‌ கிராஃபிக்ஸ் சேவ‌ல்க‌ள்தான்! த‌த்ரூப‌ உழைப்பு.... ! சில‌ இட‌ங்க‌ளில் தெரியும்தான்... அதைத் த‌விர்க்க‌ முடியாது... த‌விர்த்திருக்க‌த் தேவையுமில்லை....

காட்சிக‌ளாலும் கதைக்களத்தின் கருப்பொருட்களாலும் திரைமொழியில் எழுத‌ப்ப‌ட்டிருக்கும் ஒரு த‌மிழ் நாவ‌ல் இது....

சினிமா பாஷையில்.... "ஆடுக‌ள‌ம்" ஓர் உல‌க‌ சினிமா!

அன்புட‌ன்,
பிர‌பு எம்

மேலும் பொங்கல் படங்களுக்கு...

சிறுத்தை  , காவலன்

.

15 comments:

  1. Thanks

    To Me It Took long time to open your post

    ReplyDelete
  2. நல்ல விமர்சனம் பண்ணியிருக்கீங்க சகோ

    ReplyDelete
  3. Thank you Ramji...
    Might be some Network issue??

    ReplyDelete
  4. ரொம்ப நன்றி சகோ :)

    ReplyDelete
  5. அட...படிக்கும்போதே படம் பார்க்கணும் தோணுது சகோ...செமத்தியா என்ஜாய் பண்ணி பார்த்தது ஒவ்வெரு வரியிலும் தெறிச்சு முன்னாடி விழுகுது...எனக்கு ட்ரைலர் பார்க்கும்போதே ரொம்ப impressive ஆ இருந்தது சகோ...அதுவும் நம்ம ஊரு அட்மாஸ்பியர் :))) செம கலக்கலா நுணுக்கங்களை விடாது கவனிச்சு அழகாய் ப்ரெசென்ட் பண்ணிருக்கிங்க சகோ...weekend போகணும்...ஆதிக்காக முதலில் காவலன்...:)) ஆடுகளம் டிவிடி இல் பார்க்கும் ஐடியா இல்லை..தியேடேர் இல் தான்...:)))

    ஸோ..பொங்கல் பூரா படமா பார்த்து மண்ட காஞ்ச சகோ க்கு..இந்தாங்க முந்தா நாலு வச்ச பொங்கல்...:))))))))))

    ReplyDelete
  6. ஹாய் சகோ!!

    நிஜம்மாவே சகோ... ஒவ்வொரு சீனும் ரசிச்சு ரசிச்சுதான் பார்த்தேன்....
    காவலன் ஃபர்ஸ்ட் ஆதி சாரைக் கூட்டிட்டு போயிட்டு அடுத்து ஆடுகளம் பாக்குறது ரைட் சாய்ஸ்தான்!!
    யாம்பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்!! ஹி ஹிஹிஹி......

    ReplyDelete
  7. அழகான, மண்மணக்கும் விமர்சனம்.

    ReplyDelete
  8. நன்றி பாலகுமார் சார் ...
    திருமண வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  9. nalla print vantha pakka vendiyathuthan....

    ReplyDelete
  10. @ Gopi Ramamoorthy

    நன்றி நண்பா..

    ReplyDelete
  11. @ஜீவன் பென்னி

    கண்டிப்பா பாருங்க பாஸ்! :)

    ReplyDelete
  12. கிஷோரைப் பொலீஸ் கைது செய்து கொண்டு போனவுடன், ஜெயபாலன் ஒரு இன்ஸ்பெக்டர் வீட்டிற்கு செல்வார். அந்த இன்ஸ்பெக்டரின் மனைவி அவரை வீட்டுக்குள்ளே இருந்து கூப்பிடுவார். அதற்கு இன்ஸ்பெக்டர் வருகிறேன் என்று சொல்வார். அந்த இடம் சௌராஷ்டிரா பாஷையில் வரும்.

    ReplyDelete
  13. ஆமா அந்த சீன் ஞாபகம் இருக்கு!
    ஆனா நான் கவனிக்கல! சூப்பர்ப்....
    நன்றி நண்பா....

    வெற்றிமாறனைக் கண்டிப்பா பாராட்டலாம் இந்த நுணுக்கத்துக்கு உங்களையும்தான்! :)

    ReplyDelete
  14. இந்த "ஆடுகளம்" பதிவைத் தங்கள் வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கும் 4tamilmediaவுக்கு நன்றி...

    Link http://ww5.4tamilmedia.com/index.php/cinema/movie-review/2358-aadukalam-review

    ReplyDelete
  15. பிரபு...ஒரு வழியா ஆடுகளம் பாஆஆஆ ர்த்துட்டேன்..;-)))

    படம் பார்த்த பிறகு இப்போ ஒரு முறை இந்த விமர்சனம் படிச்சேன்..செமத்தியா இருந்தது...நான் பீல் பண்ணியதை எழுத்தில் பார்த்தபோது .....:-))
    அதுவும்...கிஷோர் நடிப்பில் நானும் அசந்தேன்...எப்படி அசந்தேன்னு சொல்ல சொன்னால் உன் அளவுக்கு சத்தியமா சொல்ல தெரிஞ்சுருக்காது.../துரையாக‌க் கிஷோர்.... ப‌ட‌த்தின் இர‌ண்டாம் நாய‌க‌ன்... நேசமும் துவேஷமும் நிமிஷக்கணக்கில் மாற்றி மாற்றிக் காட்டும் கிஷோரின் ஆட்டம் ஆடுகளத்தில் அபாரம்! கிஷோரின் பன்முக நடிப்பை வியந்து புகழ்ந்து இன்னும் பல வருடங்களுக்குத் தொட‌ர்ந்து எழுதப் போகிறோம்!//
    இது நச்....

    எனக்கு பேட்டைகாரனை விட ராதாரவி தான் கண்ணில் வந்துட்டு போனாரு...என்னவோ அது கொஞ்சம் ஒன்ற முடியல..ஒரு வேளை...ரொம்ப நமக்கு பழகாத ஒரு குரலை டப்பிங் வச்சிருக்கலாமோ...?!!!

    ஒவ்வெரு பாத்திரமும் வெகு வெகு இயற்க்கை...அந்த சேவல் சண்டை களம்...தண்ணி காமிக்க போகும்போது அந்த professional டச் ;-) சில் அவங்க கிட்டே இருக்கும் உடல் மொழி...னு எல்லாமே பக்கா....தனுஷ் நண்பரா வரும் அந்த நாகவல்லி பார்ட்டி கூட எனக்கு பிடிச்சது...;-))

    irene கதாபாத்திர காதல்...ம்ம்...பரவால...;-))

    அந்த சேவல் சண்டை களமும்...பின்னணி இசையும்...வாவ்...சான்சே இல்ல...

    படம் போலவே...இந்த விமர்சனமும் செம தரம்...நன்றி..திரு.பிரபு அவர்களே...;-))))

    ReplyDelete

வருகைக்கும் வாசிப்புக்கும் ரொம்ப நன்றி... உங்க கருத்தையும் சொல்லலாமே.. :-)