Sunday, January 02, 2011

மன் மதன் அம்பு [U] (2010)

புதிதாகப் படமெடுப்பவர்கள் சிலர் சிலசமயங்களில் நல்ல வித்தியாசமான கதையை எடுத்துக்கொண்டுகிளம்பி வழியில் தடுமாறி ஏதேதோ செய்து பூசி முழுகி ஒருவழியாகப் படத்தை முடித்துவைக்க, ரசிகர்களாகிய நாமும் நல்ல முயற்சியென்று காம்ப்ரமைஸ் செய்துகொண்டு நல்ல விஷயங்களை மட்டும் பாராட்டி வருவோமல்லவா அதுபோன்றதொரு காம்ப்ரமைஸை இங்கே கோரியிருப்பவர்கள் தமிழ்சினிமாவின் பழம்தின்று கொட்டைபோட்ட சீனியர்கள் கமலும் கே எஸ் ரவிகுமாரும் என்பதுதான் சோகம்!

நல்ல கதை... நல்ல களம்... திரைக்கதையும் ஃபர்ஸ்ட் ஹாஃப் முடிந்து "நீலவானம்.." பாடல் வரைக்கும் எல்லாமே அழகுதான்..... ஆனால் அதற்குப்பின் ஏனோ திடீரெனக் கதாபாத்திரங்கள் கோமாளி வேஷம் போட்டுக்கொண்டுத் தங்களைத் தாங்களே கலாய்த்துக்கொண்டு.... மொத்தமாக நம்மையும் கலாய்த்து எடுத்து முடித்துக் கெடுத்து வைக்கிறார்கள் நல்லதொரு படத்தை.....

ஒரு நடிகையை ஒரு பணக்காரப் பையன் காதலிக்கிறான்.... அவர்கள் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள்... அந்த நடிகை "அம்பு"வின் பாத்திரம், காதலன் "மதனி"ன் மனம், அவனுடைய அப்பா அம்மாவின் மனநிலை, இருவருக்கிடையிலான‌ மனப்போராட்டம் போன்ற விஷயங்களையெல்லாம் மிக நிதானமாக கேமராகோணங்களாலும், வசன விளையாட்டுகளாலுமே நிதர்சனமாக‌ வெளிப்படுத்திக் கதையை அடுத்த கட்டமான‌ கப்பல் பயணத்துக்குக் கவனமாக நகர்த்தியது ரசனை!...... பாரிஸில் த்ரிஷாவை வரவேற்கும் தோழி சங்கீதா...அவளின் விவாகரத்து...ஜீவனாம்சம்... இருகுழந்தைகள் மற்றும் இடையிடையே பளிச்சிடும் சின்னச் சின்ன கிச்சுகிச்சுகள் சுவாரஸ்யம்!...... நிஷாவை வேவு பார்க்க மாதவன் பணியமர்த்திய மேஜர் ஆர். "மன்"னாராகக் கமல்ஹாசனின் அட்டகாசமான என்ட்ரி! ....... இந்த அசைன்மெண்ட்டை மேஜர் ஏற்றுக்கொண்டதற்கான அழுத்தமான காரணம் என ஃபர்ஸ்ட் ஹாஃப் பவர்ப்ளேயில் எல்லாமே பவுண்டரிகள்தான்!

கதையிலேயே இவ்வளவு ஸ்கோர் செய்துவிட்டபின்னும் திரைக்கதையிலும் சிக்ஸர் அடிக்கிறார்கள், த்ரிஷா‍‍‍ - மாதவன் யதார்த்தமாக செய்யும் ஒரு கார் விபத்தின் அடுத்த முனையில் தன் வாழ்க்கையையே இழந்தவன்தான் இந்த Dull Face மன்னார் என்று ஓர் அற்புதமான முடிச்சையும் வைத்து! ..... இப்படி செம Grand-டாகப் பார்சல் செய்து முதல்பாதியை முடிக்கிறார்கள்....

இரண்டாம் பாதியில்தான் இரண்டாயிரத்தி பத்தின் சிறந்த பாடல் காட்சியமைப்பு என்று சிலாகிக்குமளவு ஆகச்சிறந்த "நீ...லவானம்.. நீ..யும் நா..னும்" பாடலும் வருகிறது... !! ஒரு காதலின் ஒட்டுமொத்த கதையையுமே ரிவர்ஸில் கொண்டுபோய் முதல் சந்திப்பில் முடித்த அந்த ஹெவன்லி மெலடிக்குக் கண்கலங்க கைதட்டி ஓய்ந்தபோது "இந்தப் படத்தையா இப்படி விமர்சிக்கிறார்கள்??" என்றுகூட நினைத்தேன்!

கதைப்படியே ஏகப்பட்ட இக்கட்டுகளுக்குள் சிக்குண்டு கண‌த்த இதயமும் மென்சோக முகமுமாய் அவ்வப்போது வலிமறைத்துப் பேசிச் சிரிக்கவைக்கும் கமல்ஹாசன்..... வெறும் Webcamல் மட்டுமே மொட்டைத் தலையாய், வலியும் வாந்தியுமாகத், தோன்றி இதயங்களைக் கணக்க வைக்கும் கேன்சர் நோயாளியாக‌ ரமேஷ் அரவிந்த்.... தாலியைக் கையில் இருகப் பற்றிக்கொண்டு மரணபயத்தை முகத்தில் பச்சைக் குத்திக்கொண்டு க்ளோஸ் அப்பில் அசத்தியிருக்கும் ஊர்வசியென்று அழுத்தப் பின்னணியில் மாதவனின் வில்லத்தனமான பணத் திமிருக்குப் பலியாவது அப்பழுக்கற்ற‌ த்ரிஷாவின் நடத்தை என்று ஓர் உலகசினிமா ரேஞ்சுக்கு சிக்கல்களைக் கலர்ஃபுல் கேன்வாசின் பின்னணியில் கதை
 கோர்த்தவர்கள்..... கதையைப் போகிறபோக்கிலேயே பிரச்னைகளை சந்திக்கவிட்டு... கமல்-த்ரிஷா காதலை இடம்பார்த்துப் பூக்கவைத்து... கமலின் பணப்பிரச்னையைத் தீர்த்திருந்தால்கூட நிறைவான படமாக மிளிரியிருக்கும் மன் மதன் அம்பு... 

அதைவிட்டு யாருக்கு என்ன பிரச்னையோ... கதை வேகமெடுக்க மிகச்சரியான நேரத்தில் வில்லன் மாதவனைக் குடிகாரக் கோமாளியாக்கி.... காமெடியன் ஃப்லிம் ப்ரொடியூசரைக் கதையில் கதாபாத்திரமாக்கி, சங்கீதா‍-கமல் காமெடி லூட்டிகள் என்று படு நாடகத்தனமாகக் காட்சிகள் அமைத்து ஓர் அமெச்சூர் மேடை நாடகமாய் பக்கம் பக்கமாய் வசனம் பேசி படுசாதாரணமாய்ப் படத்தை முடித்து ஓட்டுக் கேட்டுவந்த எம் எல் ஏ மாதிரி பல்லைக் காட்டி இளித்து நிற்கிறார்கள் கமலும் கே எஸ் ரவிகுமாரும்... :‍-(

ரொம்ப ரொம்ப அலட்சியமான திரைக்கதையினால் மனுஷ் நந்தனின் ஒளிப்பதிவு, ஷானின் எடிட்டிங், தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை என்று எதையுமே பாராட்டிப் புண்ணியமில்லை!

அருமையான ஒரு கதையை வீணாக்கிவிட்ட குற்றஉணர்ச்சி கொஞ்சமும் இல்லாமலா விஜய் டிவியோடு சேர்ந்துகொண்டு "தகிடதத்தோம்" போட்டார் கமலஹாசன் படத்தின் ப்ரமோஸ்களில்?? வெறும் மார்க்கெட்டிங்கும் ப்ரொமோஷன்களும்....ஸ்டார் கேஸ்டிங்கும்... அறிவுஜீவித்தனங்களும் படத்தைக் காப்பாற்றிவிடாது என்பதைக் கமல் புதிதாக உணரத் தேவையில்லை.... நிரூபித்திருக்கிறார் (!)  என்றுதான் சொல்லவேண்டும் யாருக்கு என்றால் யாருக்கோ தான்!! :-(

மன் மதன் அம்பு - Not a Pointed Cupid's arrow... Disappointingly ends as a Stupid throw.. :-(

வருத்தத்துடன்,

பிரபு எம்

22 comments:

  1. மன் மதன் அம்பு - Not a Pointed Cupid's arrow... Disappointingly ends as a Stupid throw.. :-(


    Nice comment :)

    ReplyDelete
  2. நன்றி அண்ணா :)
    புத்தாண்டு வாழ்த்துக்கள்..!!

    ReplyDelete
  3. என்னுடைய ரசனை அப்படியே உல்டாவாக இருந்தது... எனக்கு நீ...................ல வானம் பாட்டுக்கு அப்புறம்தான் ரொம்ப பிடிச்சது... ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை...

    ReplyDelete
  4. உங்க பீலிங்க்ஸ் புரியுது.. நானும் படம் பார்த்தேன்..
    எதிர் பார்த்த அளவில் இல்லை... :(
    சறுக்கல் தான்..

    உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்...பிரபு.. :)

    ReplyDelete
  5. dvd நேத்து தான் வாங்கினோம்...பார்த்துட்டு கம்மென்ட் போடுறேன் சகோ...:))

    ReplyDelete
  6. வணக்கம் பிரபாகரன்...

    பலருடைய கருத்தும் உங்களுடையதுதான்....
    செகண்ட் ஹாஃபின் காமெடி கலாட்டாக்கள் ஜாலியாகத்தான் போகும்... ஆனால் முதல்பாதியும் இரண்டாம்பாதியும் இருவேறு திரைப்படங்கள் பார்ப்பதுபோல் பிரிந்துகிடக்கும்... முதல்பாதி ஒரு திரைப்படமாகவும் இரண்டாம்பாதி ஒரு மேடை நாடகமாகவும் (மேடைக்குப் பதில் கப்பல்!) இருந்ததுதான் ஏமாற்றம்....
    எண்டர்டெயின்மெண்ட் என்று சொன்னால் "அவ்வை சண்முகி", "தெனாலி" படங்களின் கால்பகுதிக்குக் கூட ஈடாக முடியாது "மன் மதன் அம்பு"... இவ்வளவு அழுத்தமான மற்றும் அழகான பின்னணியில் காமெடி சர்க்கஸ் நன்றாக இருந்தாலும் முதல்பாதியின் இதமான‌ மிளகுரசத்தில் படு சுவையான காமெடி சாக்லேட்டை ஊற்றிக் கொடுத்ததாகவே உணர்ந்தேன்.... அதுதான் ஏமாற்றம்!

    புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பா :)

    ReplyDelete
  7. //உங்க பீலிங்க்ஸ் புரியுது.. நானும் படம் பார்த்தேன்..
    எதிர் பார்த்த அளவில் இல்லை... :(
    சறுக்கல் தான்.. //

    சேம் பிளட்!! :)

    //உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்...பிரபு.. :)//


    ரொம்ப ரொம்ப‌ நன்றிங்க.. தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் என்னுடைய இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  8. என்ன சகோ டிவிடிதானா??!! தியேட்டர்பக்கம் போகப்போறதில்லையா??
    டிவிடியில் குடும்பத்தோடு பார்த்தால் படம் பிடிக்கக்கூடிய படம்தான் :)
    ஹ்ம்ம்ம் பார்த்துட்டு சொல்லுங்க சகோ :)

    ReplyDelete
  9. மேஜர் பிரபு.. உங்க தைரியத்த நான் வியக்குறேன். i admire your courage..:-))

    ReplyDelete
  10. என்ன பண்றது கேப்டன்.... கமல்படம் ஆச்சே பார்த்துட்டுதான் பேசுவோமே என்று கிளம்பி சென்றுவிட்டேன்!!
    புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பா :)

    ReplyDelete
  11. கமல் படம்ன்னா பாத்தே ஆகணும் சரில்லன்னு சொன்னாலும்.

    பிரபு...அன்பான 2011ன் வாழ்த்துகள்.இன்னும் நல்ல படம் பாத்து இன்னும் நிறைய எழுதணும் !

    ReplyDelete
  12. //பிரபு...அன்பான 2011ன் வாழ்த்துகள்.இன்னும் நல்ல படம் பாத்து இன்னும் நிறைய எழுதணும் ! //

    ரொம்ப ரொம்ப நன்றி அக்கா :)
    அக்காவுக்கும் அன்பான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :)
    என‌க்கு எழுதுற‌து க‌ஷ்ட‌மே இல்ல‌ பாவ‌ம் நீங்க‌ எல்லாரும் வாசிக்க‌ணுமேன்னு தான் க‌வ‌லையா இருக்கு!! :)

    //கமல் படம்ன்னா பாத்தே ஆகணும் சரில்லன்னு சொன்னாலும்.//

    அது உண்மைதான் அக்கா... பார்க்க முடியாத படம் எல்லாம் இல்லை...
    நிச்சியமாகக் குடும்பத்துடன் நிம்மதியாகக் கண்டுகளிக்கலாம்.... நல்லதொரு வீகெண்ட் மூவிதான்...
    என்ன கொஞ்சம் வீக்கான எண்டிங் வெச்சு ஏமாத்திட்டாங்க.... :) மற்றபடி தாராளமா பார்க்கலாம்... கமலின் வயதுமுதிர்வைத் தவிர்த்து ரசிக்க நிறைய பாவனைகள் கொடுத்திருக்கார்!! பார்த்துட்டு சொல்லுங்க :)

    ReplyDelete
  13. @ ஸ்ரீ அண்ணா..

    எனக்கும் இதே வருத்தம் தான் படம் பார்த்தபோது...
    :-(((((
    எதிர்பார்ப்பு இல்லாமல் பார்த்தால் படம் ஓகே தான்.... கமல்னு ஒருத்தர் இருக்காறே அப்புறம் எப்படி எதிர்பார்ப்பு இல்லாம பார்க்க முடியும்!!! :)

    ReplyDelete
  14. //அருமையான ஒரு கதையை வீணாக்கிவிட்ட குற்றஉணர்ச்சி கொஞ்சமும் இல்லாமலா விஜய் டிவியோடு சேர்ந்துகொண்டு "தகிடதத்தோம்" போட்டார் கமலஹாசன் படத்தின் ப்ரமோஸ்களில்?? //

    இது அவரது டெம்ப்ளேட் ஸ்டைல்....

    இதை போல சத்யராஜ், தன் படத்தில் உடன் நடிக்கும் காமெடி நடிகரை பற்றி குறிப்பிடும் போது, "....குறிப்பா இந்த படத்துல அவர் பயங்கரமா காமெடி பண்ணியிருக்காரு, கன்னா பின்னானு...எப்டினா... சூட்டிங்ல நாங்கெல்லாம் பயங்கரமா சிரிச்சி....ஏகப்பட்ட டேக் வாங்கி....."
    இது சத்யராஜின் டெம்ப்ளேட்....

    மிக அமைதியாக, "எதிர்பார்த்தத விட ரொம்ப நல்லாவே இந்த படத்துக்கு வந்திருக்கு....இதுல அந்த சாங்க்.....", இது ரகுமானின் டெம்ப்ளேட்...

    இவங்க‌ டெம்ப்ளேட்டயெல்லாம் யாரும் கண்டுக்க மாட்டேங்குறாங்க. நாம டெம்ப்ளேட் கமெண்ட் போட்டா...... வாருவாருன்னு வாருராங்க.......:)

    புத்தாண்டு வாழ்த்துக்கள், பிரபு.

    ReplyDelete
  15. ஹஹஹஹாஆ :-))))))
    சூப்பர்ப்!!!

    ரொம்ப கரெக்ட் நண்பா...

    "படம் நல்லா வந்திருக்கு... ஹேட்ஸ் ஆஃப் டு டைரக்டர்... நான் ஒண்ணுமேயில்ல எல்லாமே அவங்கதான்... கொஞ்சம் பதற்றமாத்தான் இருக்கு... ரொம்ப ஹைப்... வெல்.. அதுக்கு மேல ஆண்டவன் இருக்கான்...!!"

    இது ரஜினியின் டெம்ப்ளேட்.... கரெக்டா!! ;-)

    உங்க அப்ரோச் பிடிச்சிருக்கு வார்த்தை!! :-)
    உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  16. hi da,

    U r way of expressing the flim is good.

    ReplyDelete
  17. Hey Shyam!!
    Thanks da :-)

    ReplyDelete
  18. //இது ரஜினியின் டெம்ப்ளேட்.... கரெக்டா!! ;-)//

    ஹா...ஹா...ஹா.....
    அதே....அதே.....

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. விகடன் விமர்சனம் தோத்துவிடும் போல இருக்கு ப்ரதர். வாழ்த்துக்கள் மேலும் மெருகு பெற!

    ReplyDelete

வருகைக்கும் வாசிப்புக்கும் ரொம்ப நன்றி... உங்க கருத்தையும் சொல்லலாமே.. :-)