நான் முதல் ஐந்தாம் வகுப்புவரை தமிழ்மீடியத்தில்தான் படித்தேன்..... அப்போது கணக்கில் அல்வாத் துண்டாக இரண்டு கேள்விகள் எப்போதும் பரீட்சையில் இருக்கும்.... அவை "எண் உரு எழுதுக" , "எண் பெயர் எழுதுக" என்று வரும்... அதாவது இப்போ காலாகாலத்துக்கும் செக் புக்ல எழுதுறோமே அதேதான்..... ஒரு நம்பர் கொடுத்திருப்பாங்க அதைத் தமிழ்ல நானூற்று இருபது (அட நம்ம நம்பர்!) ஐநூற்று நாற்பத்தியேழு ன்னு எண்பெயரும்..... அதையே மாற்றி எண்பெயர் கொடுத்து எண் உரு கேட்டா 420, 547 ன்னு நம்பரும் எழுதணும்... இதுக்கு எப்படியும் ஓர் அஞ்சு மார்க்காவது நிச்சியம்!! (இந்த விளக்கம் மெட்ரிகுலேஷன் அன்பர்களுக்கு மட்டும்! "எண் உரு" என்னவோ சங்ககாலத்து வார்த்தை மாதிரியில்ல இருக்கு!)
அதுவும் மூன்றாம் வகுப்பில் மூன்றிலக்க எண்களும்... நான்காவது வகுப்பில் நான்கிலக்க எண்களும் என்று லெவல் பார்த்துதான் கொடுப்பார்கள்!!
எதுக்கு இந்த ஃப்ளாஷ்பேக் என்றால்.... நம்மள மாதிரி ஜீனியஸுக்கெல்லம் மூணாம் கிளாஸிலேயே மூன்றிலக்க எண்கள்.... நான்கிலக்க ஏன் ஆறு ஏழ இலக்க எண்கள் வரைக்குமே எண் உரு எழுதுறது அஸால்டுதான்.... என்ன பண்றது ஃபாஸ்ட் ப்ரில்லியன்ஸ்! ஸோ... நேற்று திடீர்னு தோணிச்சு.... "சரி பிரபு... இப்போ மூணாம் கிளாஸ் முடிச்சே கிட்டத்தட்ட இருபது வருஷம் ஆகிடிச்சே இப்போ நம்ம ரேஞ்சுக்கு ஒரு நம்பருக்கு "எண் உரு" எழுதிப்பார்ப்போமே"னு தோணிச்சு... அதுவும் ஒரு ஹாட் நம்பருக்கு.... அதுதான்.... அதே நம்பர்தான்.... அதாங்க.... நம்முடைய ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் லேட்டஸ்ட் லக்கி நம்பரான ஒரு லட்சத்து எழுபத்தியெட்டாயிரம் கோடி!!
ஒன்று.. பத்து.. ஆயிரம்.. பத்தாயிரம்... .... கோடி.... பத்துக்கோடி... நூறுகோடி...அவ்வ்வ்வ்வ்...முடியலங்க!! :-((((
1780000000000
ரொம்ப நேரம் ரூம் போட்டு யோசிச்சு கூகிள்ல தேடி இந்தக் கேள்வியை சால்வ் பண்ணியிருக்கேன்!! கரெக்டான்னு பாத்து சொல்லுங்க.. :))
========================================
நேற்று இந்த எண் உரு கண்டுபிடிக்கும் ரிஸர்ச்-ல ஈடுபட்டிருந்த சமயம்தான் ஐபிஎஸ் ஏலத்தின் ரிசல்டுகள் வர ஆரம்பித்திருந்தன... அந்த மில்லியன் டாலர்... பில்லியன் டாலர் பிஸினஸ்களையெல்லாம் இந்திய ரூபாய் மதிப்புக்கு மாற்றி மாற்றி அந்த எண்களுக்கெல்லாம் எண் உரு எழுதிப்பழகி ப்ராக்டீஸ் பண்ணித்தான் ஒருலட்சத்து எழுபத்தியெட்டாயிரத்தின் எண் உரு எழுதும் மைல்கல்லை எட்டினேன்!!!
சில சாம்பிள்கள்.....
கவுதம் காம்பிரின் ஐபிஎல் சந்தை விலையின் எண்ணுரு: 110400000
யுவ்ராஜ்சிங்கின் சம்பள எண்ணுரு: 82600000
யூசிஃப் பதானுக்கு ஷாருக் கொடுத்திருக்கும் விலை: 96800000
இப்படி எல்லா வீரர்களின் விலைப்பட்டியலும் நெட்ல இருக்கு... ப்ராக்டிஸ் பண்ணிப்பாருங்க.... ப்ராக்டீஸ் மேக்ஸ் பர்ஃபெக்ட்!!!!!
=========================================
கிட்டத்தட்ட இந்த ஆராய்ச்சியிலேயே ரொம்ப நேரம் போயிருச்சு.... அப்போதான் திடீர்னு தோணிச்சு இந்த நம்பருங்க எல்லாம் பணமா?? என்று!!!!
நம்பரை எழுதுறதுக்கே நாக்கு தள்ளுதே எப்படி இதையெல்லாம் எண்ணி வீட்டுக்குக் கொண்டுபோறானுங்க?? ஹ்ம்ம்ம்ம்.... என்று நான்விட்ட பெருமூச்சில் வீட்டுத்தரையின் தூசு பறக்க அப்படியே ஒரு ஃப்ளாஷ்பேக் ஓபனாச்சு....
ரப்பர் பந்தையும்.... டென்னிஸ் பந்தையும் ஒரு ரீபோக் கிரிக்கெட் பேட்டை வைத்து நான் சிக்ஸரும் ஃபோருமாக வெளுத்துக்கொண்டிருக்கிறேன்.... என்னை யாராலுமே அவுட்டாக்கவே முடியல.... பவுலிங் டீம் கேப்டன் அவங்க டீம் ஃபாஸ்ட் பவுலர்கிட்ட... "லெக் சைடுல போடாதடா.. அடிக்கிறான்னு தெரியுதுல்ல.... ஆஃப் சைடுலயே மெயின்டைன் பண்ணு.... வெறும் 24ரன்தான் அடிச்சிருக்கோம்"னு கெஞ்சுறது எல்லாம் என் கண்ணெதிர்லயே நடக்குது!!! ஹ்ம்ம்ம்....
அடுத்து பவுலிங் ஸீன்... இன்ஸ்விங்...அவுட்ஸ்விங்னு பந்து எகிற ஸ்டெம்பு ஒண்ணொண்ணும் காத்துல விஜயகாந்த் கிட்ட உதை வாங்குற அடியாளு மாதிரி சும்மா சுழன்று சுழன்று விழுது!!
அடுத்த ஸீன்ல டீச்சர் கேக்குறாங்க.... " பிரபு எதிர்காலத்துல நீ என்னாவாக போற?"
டவுசர் போட்ட, மீசை முளைக்காத பிரபு துள்ளியெழுந்து சொல்லுறான் " நான் எதிர்காலத்துல ஒரு பெரிய கிர்க்கெட்டரா வரப்போறேன் டீச்சர்!!!"
கண்கள்ல நீரோட ஃப்ளாஷ்பேக் க்ளோஸ் ஆக..... சுமார் பதினஞ்சு வருடங்களுக்குப் பிறகு.... இப்பொழுது என் வருட சம்பளத்துக்கு எண் உரு எழுதிப்பார்த்தேன் ஆறே இலக்கத்துல ஆரம்பிக்குறதுக்கு முன்னடியே முடிஞ்சிருச்சு!!!!!
தென் பாண்டிச் சீமையில மேட்ச் ஆடும் வீதியில பேட்டோட வந்தவனே யாரடிச்சாரோ... டொண்ட டொண்ட டொண்ட டொண்டடொய்ங்...... :-((((((((((
பசங்கள கிரிக்கெட் விளையாட விடுங்கப்பா..........
=========================================
ஆஃபீஸ்ல கிரிக்கெட் டோர்ணமென்ட்.... விடுவோமா.... ஒரு வெள்ளை சட்டை வெள்ளை பேண்ட் பவர் ஷு எல்லாம் போட்டுக்க்கிட்டு போய் நின்னுட்டேன்.... ஆனா அங்கேயும் ஜஸ்ட்மிஸ்ஸு...... டீம் செலக்ஷன் நெட்ஸ்ஸுக்கு லேட்டா போயிட்டேன்..... ஆனாலும் விடாம இன்ஃப்ளுயென்ஸ் பண்ணி ஆளுங்கட்சி எம் எல் ஏ கிட்ட லெட்டரெல்லாம் வாங்கிட்டு டீம் கோச் கிட்டப் போய் நின்னா....
"நீ பேட்ஸ்மானா பவுலராப்பா??" ன்னு சாதாரணமா கேட்டுட்டாரு!!......
போன ஸீன்ல நீங்க பார்த்த அதே ஃப்ளாஷ்பேக் காட்சிகள் மறுபடி கண்முன்னே தோன்ற......
"என்னைப் பத்தி சுருக்கமா சொல்லணும்னா..... சச்சின் பாதி.... ஜாகிர்கான் பாதி கலந்து செய்த கலவை நான்!!"
என்று ஆளவந்தான் கமல் மாதிரி கையை விரிச்சு ஆக்ஷன் செய்ய ஒரு மாதிரி பார்த்துட்டு "நாளைக்கு க்ரவுண்டுக்கு வந்திடு" ன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு.....
எம் ஆர் எஃப் பேட்..... சச்சின் கையெழுத்துவேற போட்டிருக்குது பேட்ல.... சச்சின் ஸ்டைல்லயே வானத்த ஒருதபா அண்ணாந்து பாத்துட்டு.... ஆட ஆரம்பிச்சேன்.... ஆறுபால்... ஹஹஹாஆ என்னை அவுட் ஆக்கவே முடியல.... ஆனா என்ன ஆறு பந்துமே நான் எவ்வளவோ ஷாட்ஸ் ட்ரை பண்ணியும் பேட்ல படல....பரந்து விரிஞ்ச நம்ம பாடில எங்கேயாவது பட்டுக் கீழே விழுந்துடிச்சு.... ஆனா ஒண்ணு மட்டும் உறுதி ஒரு பந்துகூட இவனத் தாண்டி ஸ்டெம்புல படாது டெஸ்ட் மேட்சுக்கு சூப்பர் ப்ளேயர் என்று காதுபடப் புகழ்ந்தார்கள் மக்கள்!!!!!
பந்து பட்டு உடம்பு பூரா உள்காயத்தோட அடுத்து பவுலிங் போடப்போனேன்..... ஆறு பாலும் முடிஞ்சிருச்சு ஒரு பாலைக்கூட பேட்ஸ்மேன் பேட்டால தொடக்கூட முடியல...!!! ஆனா இன்னும் ஓவர்ல ஆறு பாலும் அப்படியே மிச்சம் இருக்கிறதா அம்பெயர் சொன்னான்... போட்ட எல்லா பாலுமே வைடு பாலாம்!! ஆனா அதுவும் பறந்து பறந்து கேட்ச் பிடிக்குறதுக்கு விக்கெட் கீப்பருக்கு நல்ல ப்ராக்டீஸா இருந்துச்சுன்னு பாராட்டினாங்க!
ஓகே ஓகேன்னு சத்தமில்லாம பெவிலியன் பக்கம் ஒதுங்கினவனைத் தேடிவந்து....
"சச்சின் பாதி.... ஜாகிர்கான் பாதி ... கலந்து செய்த கலவை நான்"னு சொன்னியேப்பா???? என்று கோச் ஞாபகமாகக் கேட்க.....
"அதைத்தான் சார் இப்பவும் சொல்றேன்.... என்ன கொஞ்சம் மாத்திக் கலந்த கலவை நான்... சச்சின் மாதிரி பவுலிங்கும்... ஜாகிர்கான் மாதிரி பேட்டிங்கும் பண்ணுவேன்!! ஹி ஹி ஹி!!"
என்று மழுப்பிவிட்டு ஆஃபீஸில் என் ஸீட்டுக்குப் போய் லேப்டாப்பைத் திறந்து வேலயப் பார்த்துட்டு வீட்டுக்குப்போனேன்!
ஐந்தில் வளையாதது இப்போல்லாம் இருபத்தியஞ்சுல கூட வளையமாட்டேங்குதுங்க!!! ஸோ டச்சுல இருங்க பாஸு!!!
வர்ட்டா....
வருங்கால ஐபிஎல் மதுரை அணியின் கேப்டன்,
பிரபு எம்
சுத்தமா எதுவும் படிக்கல.:)..ஆனால் தமிழ் மணம் க்காக இந்த கமெண்ட் போட்டு போறேன்..சகோ கழுத!! நாளைக்கு படிக்கிறேன்...:)))
ReplyDelete//வருங்கால ஐபிஎல் மதுரை அணியின் கேப்டன்,
ReplyDeleteபிரபு எம்//
:)))))
ஹஹஹா.... நன்றி சகோ! :)
ReplyDeleteஅவசரமே இல்ல மெதுவா படிச்சுட்டு நீங்க தாறுமாறா கலாய்க்கலாம்!! வெய்ட்டிங் ஃபார் யுவர் கலாய்ச்சிஃபிகேஷன்ஸ்!! :)
அழகாய் இருந்தது.. பயமாய் இல்லையா.. (மதுரை அணியின் தலைவர் என்று சொல்வதற்கு - வாரிசுகளின் பார்வை படாமலே போய்விடும் என்று எதிர் பார்க்கிறீர்கள் போல..)
ReplyDeleteஇதுவரைக்கும் பயமா இல்ல... ஆனா இப்போ உங்க கமெண்ட் பாத்ததுல இருந்து உள்ளே லைட்டா ஒரு புது ஃபீலிங் வருது... பயமாத்தான் இருக்குமோ!!! நீங்க நல்லா இருக்கணும் பாஸ் :)
ReplyDeleteவருங்கால மதுரை அணியின் கேப்டன் - புல்லரிக்குது - நடக்கட்டும்
ReplyDeleteஹஹஹா... நன்றி சீனா அய்யா :-)
ReplyDeleteஓய்...செம கலக்கல் சகோ...காலைலயே சிரிக்க வச்சுட்டிங்க...வெரி குட்..வெரி குட்...:)) ஆனால் வருங்கால மதுரை கேப்டன் சொல்லி நம்ம ஊரு பேரை பஞ்சர் ஆக்கினது புடிக்கலை சகோ..புடிக்கலை...ரொம்ப புடிக்கலை சகோ...ரொம்ப ரொம்ப புடிக்கலை..! ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப..ரொம்ப.................................................................................................ரொம்ப புடிக்கலை..) இடைப்பட்ட புடிக்கலைக்கு எண்ணுரு எழுதவும்..:))...(இப்ப என்ன செய்விங்க..செய்விங்க...கூகிள் மச்சி ட்ட முடிஞ்சால் கேட்டு பாருங்க..அது மண்ணை கவ்வும்...))
ReplyDelete/டவுசர் போட்ட, மீசை முளைக்காத பிரபு துள்ளியெழுந்து சொல்லுறான் " நான் எதிர்காலத்துல ஒரு பெரிய கிர்க்கெட்டரா வரப்போறேன் டீச்சர்!!!"//
ReplyDeleteஅந்த டீச்சர் அதை கேட்டு ரெண்டு நாள் லீவு னு ஊருக்குள்ளே அப்போ பேசிகிட்டாங்க...அப்புடியா சகோ...அப்போவே நீங்க பிரபலம் தான் சகோ நம்ம ஊரில்...:)))
/ சச்சின் ஸ்டைல்லயே வானத்த ஒருதபா அண்ணாந்து பாத்துட்டு.... ஆட ஆரம்பிச்சேன்.... ஆறுபால்... ஹஹஹாஆ என்னை அவுட் ஆக்கவே முடியல.... ஆனா என்ன ஆறு பந்துமே நான் எவ்வளவோ ஷாட்ஸ் ட்ரை பண்ணியும் பேட்ல படல....பரந்து விரிஞ்ச நம்ம பாடில எங்கேயாவது பட்டுக் கீழே விழுந்துடிச்சு.... ஆனா ஒண்ணு மட்டும் உறுதி ஒரு பந்துகூட இவனத் தாண்டி ஸ்டெம்புல படாது டெஸ்ட் மேட்சுக்கு சூப்பர் ப்ளேயர் என்று காதுபடப் புகழ்ந்தார்கள் மக்கள்!!!!!
ReplyDeleteபந்து பட்டு உடம்பு பூரா உள்காயத்தோட அடுத்து பவுலிங் போடப்போனேன்..... ஆறு பாலும் முடிஞ்சிருச்சு ஒரு பாலைக்கூட பேட்ஸ்மேன் பேட்டால தொடக்கூட முடியல...!!! ஆனா இன்னும் ஓவர்ல ஆறு பாலும் அப்படியே மிச்சம் இருக்கிறதா அம்பெயர் சொன்னான்... போட்ட எல்லா பாலுமே வைடு பாலாம்!! ஆனா அதுவும் பறந்து பறந்து கேட்ச் பிடிக்குறதுக்கு விக்கெட் கீப்பருக்கு நல்ல ப்ராக்டீஸா இருந்துச்சுன்னு பாராட்டினாங்க!/
இதை படிச்சுட்டு ..இன்னும் சிரிக்கிறேன்...சிரிக்கிறேன்...சிரிக்கிறேன்...எதுக்கு இந்த தேவை இல்லாத ஆசை சகோ...உங்க டீம் படுதோல்வி னு கேள்வி பட்டேன்...மெய்யாலுமா சகோ?...கும்மு கும்முன்னு கும்மிருப்பான்களே...:)) ஹ ஹ....ட்ரீட் ப்ளீஸ்...
//ஐந்தில் வளையாதது இப்போல்லாம் இருபத்தியஞ்சுல கூட வளையமாட்டேங்குதுங்க!!! ஸோ டச்சுல இருங்க பாஸு!!!//
ReplyDeleteஇது நச் :)
இப்போலாம் bowlers ஐ கூட புரிஞ்சுக்க முடில:)..பஜ்ஜு பையன் century போட்டு அசத்திட்டான் தானே போன மாசம்...:)) கிரேட் batsman கங்குலி,லாரா வை எல்லாம் சீந்த யாரும் இல்ல:))..சில நேரங்களில் உல்டா சச்சின்,ஜாகிர் combination ஆச்சிரியமும் படுத்தலாம் சகோ..:))) கங்குலி ஸ்பின் சில டைம் செம workout ஆகிருக்கு..:)))
ReplyDeleteஎனக்கு என்னவோ இந்த மேட்ச் fixing issues கு அப்புறம் மேட்ச் பார்க்கும் சுவாரஸ்யம் ரொம்பவே போய்டுச்சு...இந்தியன் டீம் விட என் மிக சிறுவயதில் வெஸ்ட் இண்டீஸ் டீம் இன் பரமவிசிறி...(viviyan richards..richi richardson,walsh இருந்த டைம்..) அதற்க்கு அப்புறம் பாகிஸ்தான் உலக கோப்பையை ஜெயிச்ச போது என் பள்ளி தோழிகளுக்கு chochlates கொடுத்தேன்..(imran,akram மின் sema fan நான் ) துரோகி னு என் தம்பி திட்டுவான் அப்போ...:)) அப்புறம் சவுத் ஆப்ரிக்கா:)..அற்புதமான செம டீம் சகோ...(நான் சொல்றது hansie cronje கேப்டன் ஆ இருந்த போது...பறக்கும் பறவை johnty rohdes, அழகான சுஸ்மிதா சென்(ஹ ஹ...காலிஸ் ஐ தான் சொல்றேன்..அந்த ஜாட இருக்கும் பிரபு..),எனக்கு பிரியமான க்ளுஸ் குட்டி...ஹ ஹ..(glucener ) தான்...) southafrica டீம் combination என்றால் அவளவு விரும்பி பார்ப்பேன் முன்னொரு காலத்தில்...ம்ம்..எப்போ என் செல்லம் ஹன்சி பையன் :))) டுபுக்கு னு தெரிஞ்சதோ...ஹ ஹ...அப்டியே ஆர்வம் போய்டுச்சு...:(( ....இப்போலாம் அந்த லாஸ்ட் ஓவர் மட்டுமே பார்க்கும் பொண்ணா மாறிட்டேன்:(( நினைவுகளை கொஞ்சம் திருப்பி விட்டதுக்கு கொஞ்சூண்டு தேங்க்ஸ்...:)) செம காமடி பதிவு சகோ..:))
இப்போலாம் bowlers ஐ கூட புரிஞ்சுக்க முடில:)..பஜ்ஜு பையன் century போட்டு அசத்திட்டான் தானே போன மாசம்...:)) கிரேட் batsman கங்குலி,லாரா வை எல்லாம் சீந்த யாரும் இல்ல:))..சில நேரங்களில் உல்டா சச்சின்,ஜாகிர் combination ஆச்சிரியமும் படுத்தலாம் சகோ..:))) கங்குலி ஸ்பின் சில டைம் செம workout ஆகிருக்கு..:)))
ReplyDeleteஎனக்கு என்னவோ இந்த மேட்ச் fixing issues கு அப்புறம் மேட்ச் பார்க்கும் சுவாரஸ்யம் ரொம்பவே போய்டுச்சு...இந்தியன் டீம் விட என் மிக சிறுவயதில் வெஸ்ட் இண்டீஸ் டீம் இன் பரமவிசிறி...(viviyan richards..richi richardson,walsh இருந்த டைம்..) அதற்க்கு அப்புறம் பாகிஸ்தான் உலக கோப்பையை ஜெயிச்ச போது என் பள்ளி தோழிகளுக்கு chochlates கொடுத்தேன்..(imran,akram மின் sema fan நான் ) துரோகி னு என் தம்பி திட்டுவான் அப்போ...:)) அப்புறம் சவுத் ஆப்ரிக்கா:)..அற்புதமான செம டீம் சகோ...(நான் சொல்றது hansie cronje கேப்டன் ஆ இருந்த போது...பறக்கும் பறவை johnty rohdes, அழகான சுஸ்மிதா சென்(ஹ ஹ...காலிஸ் ஐ தான் சொல்றேன்..அந்த ஜாட இருக்கும் பிரபு..),எனக்கு பிரியமான க்ளுஸ் குட்டி...ஹ ஹ..(glucener ) தான்...) southafrica டீம் combination என்றால் அவளவு விரும்பி பார்ப்பேன் முன்னொரு காலத்தில்...ம்ம்..எப்போ என் செல்லம் ஹன்சி பையன் :))) டுபுக்கு னு தெரிஞ்சதோ...ஹ ஹ...அப்டியே ஆர்வம் போய்டுச்சு...:(( ....இப்போலாம் அந்த லாஸ்ட் ஓவர் மட்டுமே பார்க்கும் பொண்ணா மாறிட்டேன்:(( நினைவுகளை கொஞ்சம் திருப்பி விட்டதுக்கு கொஞ்சூண்டு தேங்க்ஸ்...:)) செம காமடி பதிவு சகோ..:))
ReplyDelete//இடைப்பட்ட புடிக்கலைக்கு எண்ணுரு எழுதவும்..:))...(இப்ப என்ன செய்விங்க..செய்விங்க...கூகிள் மச்சி ட்ட முடிஞ்சால் கேட்டு பாருங்க..அது மண்ணை கவ்வும்...)) //
ReplyDeleteசகோ உங்க பவரைப் பார்த்து பயந்தே போயிட்டேன்... கூகுள் மச்சி கிட்ட கேட்டேன்.... உங்க பேரைக் கேட்டு சும்மா அதிருய அதிரில் சிஸ்டம் ஹேங் ஆகிடிச்சு..... சான்ஸே இல்ல.... :-)
//அந்த டீச்சர் அதை கேட்டு ரெண்டு நாள் லீவு னு ஊருக்குள்ளே அப்போ பேசிகிட்டாங்க...அப்புடியா சகோ...அப்போவே நீங்க பிரபலம் தான் சகோ நம்ம ஊரில்...:))) //
ReplyDeleteஆமா மெடிக்கல் லீவுல போயி பி.பி.சி யில் பேட்டி கொடுத்தாங்க... ஏன் சகோ நீங்க வேற... நானே என்னை யாரும் ஐபிஎல் ல ஏலத்துல எடுக்க முன்வரலன்னு நொந்துபோய் இருக்கேன்!! :-)))))
பாகிஸ்தான் ஜெயிச்சப்போ ஸ்வீட் கொடுத்தீங்களா??? துடிக்கிறது மீசை அதை அடக்கு அடக்கு என்று.... ஏன் சகோ இந்த கொலவெறி!! ஹ்ம்ம்ம் ஆனா நானும் அக்ரமுடைய தீவிர ரசிகன்.... வக்காரும் ரொம்பப் பிடிக்கும்.... இம்ரான்கான் பிடிக்காது!! வெல்... 1992 உலகக்கோப்பை நியாயமா வாங்கியிருக்க வேண்டியது கெப்ளர் வெஸ்ஸல்ஸ்தான்.... செமி ஃபைனல்ஸில் அநியாயமா மழை வந்து நாசமா போற டக்வர்த்/லூயிஸ் விதியால சௌத் ஆஃப்ரிக்கா வெளியேறி ஒன்ன்னுக்கும் உதவாத இங்கிலாந்து ஃபைனல் போய் பாகிஸ்தானுக்கு கப்பைத் தூக்கிக் கொடுத்துட்டு வந்தானுங்க..... க்ரஹாம் கூச் ரொம்ப பிடிவாதம் பிடிச்சப்ப வெஸ்ஸல்ஸ் வெளியேறியது அவர் ஒரு ஜென்டில்மேன் கே.டி குஞ்சுமோன் என்று காட்டியது!!! :)
ReplyDeleteஇன்னிக்கு வரைக்கும் நிறம்மாறாத ஒரே சிறப்பான அணி சௌத் ஆஃபிரிக்காதான் சகோ... ஹேன்சியோட அணி.... தி பெஸ்ட் அதுதான்... ஒத்துக்குறேன்..... உங்க லிஸ்ட்ல என்னுடைய ரொம்ப ஃபேவரைட்... க்ளுஸ்னர்தான்!!! அசாருதீன்கூட சேர்ந்து நாசமா போயிட்டாரு ஹேன்சி.... அவன் செத்துப்போனதுதான் பரிதாபம்.. :(( ஆலன் டொனால்டுதான் பவுலிங்கில் என்னுடைய ஹீரோ... ஓடிவந்து காத்துல ஒரு நொடி கம்பீரமா பறந்து பந்தை ரிலீஸ் பண்ணுற அழகே அழகு!! :)
என்னது காலீஸ்... சுஷ்மிதாசென்னா??? அட ஆமா திங்க் பண்ணா... சுஷ்மிதா இன்னும் கொஞ்சம் அதிகமா தண்ணியடிச்சு ஜிம்முக்கு ஒருவாரம் லீவ் போட்டா கன்னம் புஸ்புஸ்னு காலிஸ்மாதிரிதான் இருப்பாளோ!!
அவங்க ஃபேமிலியில் என்ன ஃபாரின் கொலாபரேஷனோ!!! ஹிஹிஹிஹி...
ஆமாம் சகோ..சவுத் ஆப்ரிக்கா கொஞ்சம் அன்லக்கி பசங்க சகோ...எனக்கும் நெட்டபையன்:)) டொனால்ட் பிடிக்கும்...
ReplyDelete//அவங்க ஃபேமிலியில் என்ன ஃபாரின் கொலாபரேஷனோ!!! ஹிஹிஹிஹி...//
பத்த வச்சிட்டியே பரட்ட...ஹ ஹ..
//உங்க லிஸ்ட்ல என்னுடைய ரொம்ப ஃபேவரைட்... க்ளுஸ்னர்தான்!!! அசாருதீன்கூட சேர்ந்து நாசமா போயிட்டாரு ஹேன்சி.... அவன் செத்துப்போனதுதான் பரிதாபம்.. :((//
ReplyDeleteஆமாம் பிரபு...அவன் செத்து போன விஷயம் தெரிஞ்சு ரொம்ப சந்தோஷம் அடைஞ்சது என் கணவர் தான்...ஹஹா..பார்த்துக்கோங்க...எந்த அளவுக்கு நான் வெறுப்பேத்தி இருப்பேன்னு...ஹன்சி பையன் கிரௌண்ட் இல் இருக்கும்போது நகத்தை கடிச்சிட்டே இருப்பான் கவனிச்சிருக்கிங்களா சகோ...அதை கூட நான் ரசிச்சி..சே..என்னமாய் ஸ்டைல் ஆ நடக்குறான்..நகம் கடிக்கிறான்..எச்சி துப்புறான்..:))))) னு சொல்லிட்டே இருப்பேன்...:))) சே..அந்த கொடுமைய் தாங்கமால் தான் செத்தானான்னு தெரில...:)))))
அப்புறம் வெறும் க்ளுஸ்னர் னு சொல்ல கூடாது..சிக்ஸர் க்ளுஸ்னர் னு சொல்லி பழகனும் நீங்க..:))))
:-))))))))))).அருமை.
ReplyDeleteநன்றி அண்ணா :)
ReplyDeleteappavachu ennai teamla serpeengala illa flashbackla enaku nadantha mari waterboy aakiduveengala??? (housing board cricket match in 1996 do you remember??)
ReplyDeleteஎனக்கும் கணக்கில விக்க தான் கணக்க படிச்சிட்டு அப்புறம் வரட்டுமா..ஃ??
ReplyDelete@Vijay...
ReplyDeleteHahaha.... Yes yes remember very well!!! :-))
You still remember that!!!!! Hmmmm.. Gone are those days..... :-(
@ம.தி சுதா
ReplyDeleteஹஹஹா.... நன்றி சகோதரா.. :)
உங்ககிட்ட ஒரு கேள்வி மெட்ரிக்ல படிச்சா தமிழ் வார்த்தைகள் தெரியாம போயிடுமா.??? பள்ளி சேர்ந்ததிலிருந்து நான் மெட்ரிக் தான்.. இருந்தாலும் இப்படியெல்லாம் சொல்லகூடாது.. அப்பரம் சச்சினோட சரித்திரத்த எடுத்து பாருங்க.. இப்ப சச்சின் பௌல் பண்ணாம இருக்கலாம் அப்போ பார்ட் டைம் பௌலராகவே 150க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்னு உங்களுக்கு தெரியாம இருக்குமா.. உங்க எண் உரு சரியே என்பதை சொல்கிறேன்.. அப்பரம் ஆனந்தி எண் உருதானே கேட்டாங்க, எண் பெயர் கேட்கலையே சும்மா அடிச்சுவிட வேண்டிதுதானே.. எடுத்துகாட்டா இதான் ஆனந்திக்கு பதில் 100000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000வச்சிக்கோங்க(சமூக சேவைனா எனக்கு ரொம்ப பிடிக்கும்..) பிறகு உங்கள் சோக கதை.. மனசுக்கு கஷ்டமாக தான் இருக்கிறது.. நீங்க கொஞ்சம் லேட்டா வந்துட்டீங்க பாஸ்.. கொஞ்சம் முன்னாடி வந்திருந்தீங்கன்னா அதாவது 2001ல வந்திருந்தீங்கன்னா உங்கள லகான் அணியில சேத்திருந்திருப்பன்.. பரவால உடனே கிளம்பி வாங்க பட்டாபட்டி அணியில சேத்துவிடுறன்..
ReplyDeleteஅப்பரம் முதல்ல சொல்லும்போது ஐபிஎல்க்கு பதில் ஐபிஎஸ்னு போட்டுட்டீங்க.. பாத்துக்கோங்க..
ReplyDelete