Monday, January 17, 2011

காவலன் [U] (2011)


வெல்க‌ம் பேக் விஜ‌ய்!

ஸ்வீட் எடு கொண்டாடு... என்பதுபோல ஒரு ஜாலி சாக்லேட் காவலன்!
வழக்கம் போல இதுவும் இம்போர்டட் சாக்லேட்தான்... ராப்பரில் இந்தமுறை "மேட் இன் கேரளா!"

சின்னதொரு ட்வீட் போன்ற‌ சிறுக‌தைக்கு க்யூட் & ஸ்வீட்டாக‌த் திரைக்க‌தைய‌மைத்து, திகட்டாத‌ காமெடி, சீரியஸாக‌ இல்லாம‌ல் சினிமாட்டிக்காக இரண்டு ச‌ண்டைக‌ள், விஜ‌ய் டான்ஸுக்கு ஏதுவாய் பாட‌ல்கள், ராஜ்கிரண்..அசின்..ரோஜா என்று பெரிய ஸ்டார் கேஸ்டிங் என‌ ந‌ல்ல‌வொரு ஃபேமலி பேக்கேஜ்!

சண்டியர்த்தனம் செய்துகொண்டிருக்கும் சேட்டைக்கார விஜய்யை ஒரு வழிக்குக் கொண்டுவர ராஜ்கிரணுக்கு பாடிகார்டாக அவர்கள் வீட்டாரே அனுப்பிவைக்க‌... ஒரு க‌ட்ட‌த்தில் ராஜ்கிரணால் தன் மகள் அசினுக்கு ஃபுல்டைம் காவ‌ல‌னாக விஜய் அம‌ர்த்த‌ப்ப‌டுகிறார்.... "பாடிகார்டு" என்று ஒரு யுனிஃபார்மைப் போட்டுக்கொண்டு விரைப்பும் முறைப்புமாய் இம்சிக்கும் ஸ்ட்ரிக்டு பார்ட்டியைக் கொஞ்ச‌ம் ஜாலி பண்ண அசின் விளையாட்டுத்த‌ன‌மாக‌ ஃபோனில் குர‌லை மாற்றிப் பேச.. இன்னொசெண்ட் விஜ‌யிட‌ம் சின்ன‌ச் சின்ன‌ மாற்ற‌ங்க‌ள்! தொட‌ர்ந்து அசின் ஃபோன் கேர‌க்டராக‌ விஜ‌ய்யை ல‌வ் ப‌ண்ணுவ‌தாக‌ச் சொல்லிக் க‌லாய்க்க‌.... வெள்ள‌ந்தி விஜய் முதலில் ச‌வுண்டுவிட்டு மிர‌ட்டினாலும் மெல்ல‌ மெல்ல‌ அந்த‌ ஃபோன் பெண்ணை சீரியஸாகக் காத‌லிக்க ஆர‌ம்பிக்கிறார்... விஜ‌ய்யின் வெள்ளை மனசு அசினையும் ப‌டுஈசியாக‌ ஈர்த்துவிட‌ அசினும் காத‌ல்வ‌ய‌ப்ப‌டுகிறார்..... விளையாட்டுக் காத‌ல் வினையாகிற‌து கார‌ண‌ம் அசின் ஏற்கென‌வே ல‌ண்ட‌ன் மாப்பிள்ளை ஒருவ‌ருக்கு நிச்சிய‌ம் செய்ய‌ப்ப‌ட்ட‌ பெண்! விஜ‌ய்க்கு அசினின் மேலிருக்கும் ஒப்ப‌ற்ற‌ ம‌ரியாதை ஒருபுறம் என்றால் ஒரு ரோல்மாட‌லாகத் தான் ஹீரோ ஒர்ஷிப் செய்யும் ராஜ்கிர‌ணுக்கு எந்த‌க் கார‌ண‌ம் கொண்டும் ந‌ம்பிக்கை துரோக‌ம் இழைக்க‌ முன்வரவே வராத‌ விஜ‌ய்யின் பாத்திரம் மறுபுறம் என்று ஜாலி காத‌லில் சீரிய‌ஸ் முடிச்சுகள் விழுகின்றன முடிச்சு இருகும் வேளையில், இறுதிவரை அசின்தான் தன் காதலி என்று விஜய்க்குத் தெரியாமலேயேபோய், வேறுவித‌மாகக் கட்டவிழ்ந்து ஒரு சிறுக‌தைக்கான‌ ட்விஸ்ட்டுட‌ன் சின்ன‌தாய்ப் புருவ‌த்தை உய‌ர்த்த‌வைத்து முற்று பெறுகிற‌து!!

"ஸ்டார்" "த‌ள‌ப‌தி" என்று இமேஜ்க‌ளைத் தேடிக்கொள்ளும் முன்பு பார்த்த‌ விஜ‌ய்யை நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌கு.. பில்டப், ப‌ஞ்ச் ட‌ய‌லாக் தொல்லைக‌ளின்றி "ப்ரிய‌மான‌வ‌ளே", "ஃப்ரெண்ட்ஸ்", "வ‌சீக‌ரா" டைப்பில் பார்க்க‌ முடிவ‌து மிக‌ப்பெரிய‌ ஆறுத‌ல்... இன்னும் காலேஜ் ஸ்டூட‌ண்டாக நம்பமுடியும‌ள‌வு ஸ்லிம் அன்ட் ஸ்லீக்காக‌ உட‌லை வைத்துக்கொண்டு துருதுருவென‌ வ‌ல‌ம் வ‌ந்து "பூமிநாத‌ன்" பாத்திர‌த்தை அனுப‌வித்துதான் செய்திருக்கிறார்... ஆனால் கொஞ்சம் சினிமாத்தனமாக அமைந்திருக்கும் க‌டைசி காட்சிக‌ளில் ஏனோ காஸ்டியூமிலிருந்து மாடுலேஷன் வரை கார்த்திக்கை அச்சு அச‌லாக அப்படியே இமிடேட் செய்துவைத்திருக்கிறார்! மற்றபடி தன்னை எஸ்கலேட்டரில் நிற்கவைத்து அடுத்தடுத்த தளங்களுக்குத் தானே உயர்த்திய ஃபேமிலி ஆடியன்ஸைக் குழப்பமின்றி ரீச் செய்திருக்கிறார் என்பது உண்மை... வெல்கம் பேக் மிஸ்டர் விஜய்!

அசின் குறும்பேறிய‌ விழிக‌ளால் க‌ல‌க‌ல‌க்க‌ச்செய்வ‌திலும் அதே விழிக‌ள் விஜ‌ய் ப‌ரிதாப‌மாக‌க் க‌ண்முன்னே த‌ன்னிட‌ம் ஏமாந்து த‌விக்கும்போது குள‌மாகிக் குலுங்கிக் குலுங்கி அழுவ‌திலும் நிறைவாக‌ ந‌டித்திருக்கிறார்.... ராஜ்கிர‌ணின் க‌ம்பீர‌ம் காப்பாற்றியிருக்கும் பல சமகாலப் ப‌ட‌ங்க‌ளில் இதையும் சேர்த்துக்கொள்ள‌லாம்! அசினின் தோழியாக‌ப் ப‌ட‌ம் முழுதும் ஒரு முக்கிய‌ பாத்திர‌மாய் வ‌ல‌ம் வ‌ரும் மித்ரா குரிய‌ன் ஓர் அழுத்த‌மான‌ பொண்ணாக‌ வெளிப்ப‌டுத்தியிருக்கும் ந‌டிப்பும் ர‌சிக்க‌த்த‌க்க‌தே.... வ‌டிவேலு கிச்சுகிச்சு மூட்டியிருக்கிறார் இத‌மான‌ காமெடிக‌ளில் க‌தை ஜோராக‌ வ‌ழுக்கி ந‌கர்ந்திருக்கிறது.... நின்றுகொண்டே தூங்கிவிடும் எம் எஸ் பாஸ்க‌ர் ப‌டு சுவார‌ஸ்ய‌ப் பேர்வ‌ழி!

பொதுவாகவே ம‌லையாள‌ ப‌ட்ஜெட்டில் சிக்க‌ன‌மாக‌ இடுக்கிக் கொண்டு ஹிட் கொடுக்கும் இயக்குனர்களுக்குத் த‌மிழ் த‌ரும் தாராள‌மும் வியாபார‌ விஸ்தீர‌ண‌மும் அழ‌கியல் அலங்காரத்திலெல்லாம் க‌வ‌ன‌ம் செலுத்தி ரிச்சான‌ அவுட்புட் கொடுக்க‌வைப்ப‌வைதான்... அந்த‌ ரீதியில் ஏகாம்ப‌ர‌த்தின் குளுமையான ஒளிப்ப‌திவிலும் வித்யாசாக‌ரின் மென்மையான‌ இசையிலும் காவ‌ல‌ன் கண்களுக்குக் குளிர்ச்சியாய் மிளிர்கிறான்.. விஜ‌ய்யின் காஸ்ட்யூம்க‌ளை டிசைன் செய்திருக்கும் ந‌ளினி ஸ்ரீராமுக்கும் பாராட்டுக்க‌ள்!

கோப‌ம், குரோத‌ம், அருவாள், ர‌த்த‌ம் போன்ற‌ வார்த்தைக‌ள் இல்லாம‌ல் ஒரு விம‌ர்ச‌ன‌ம் எழுதிமுடித்திருப்ப‌தே நிம்ம‌தியாக‌ இருக்கிற‌து! சித்திக் மீது ந‌ம்பிக்கை வைத்து மீண்டும் க‌ள‌ம்க‌ண்டிருக்கும் விஜ‌ய்க்கு நிச்சிய‌ம் "காவ‌ல‌ன்" ஹேப்பி பொங்க‌ல் சொல்லுவான் என்றுதான் நினைக்கிறேன்....

சிக்ஸ‌ர் இல்லாவிட்டாலும் நிச்சிய‌மாக‌ இதுவொரு ப‌வுண்ட‌ரி!

எ ஜாலி வீகெண்ட் காவ‌ல‌ன் ஷோ!!

அன்புட‌ன்,
பிர‌பு எம்

மேலும் பொங்கல் படங்களுக்கு.....

"ஆடுகளம்""சிறுத்தை"

.

18 comments:

  1. Nataraj5:39 AM

    மொத தடவை வரேன்...நல்லா எழுதறீங்க..

    ReplyDelete
  2. எனக்கும் பிரண்ட்ஸ் கிட்டே இருந்து உடனே ரிசல்ட் வந்துருச்சு சகோ...இந்த படம் நல்லா இருக்குனு...:))) ஸோ கொஞ்ச நாள் விஜய் ஐ வச்சு கிண்டல் பண்ண முடியாது...:((((

    ReplyDelete
  3. //சிக்ஸ‌ர் இல்லாவிட்டாலும் நிச்சிய‌மாக‌ இதுவொரு ப‌வுண்ட‌ரி!//
    இந்த பன்ச் ரொம்ப பிடிச்சது...:))

    ReplyDelete
  4. //விஜ‌ய்யின் காஸ்ட்யூம்க‌ளை டிசைன் செய்திருக்கும் ந‌ளினி ஸ்ரீராமுக்கும் பாராட்டுக்க‌ள்!//

    நல்லா அப்செர்வ் பண்றீங்க சகோ...குட்...

    ReplyDelete
  5. @nataraj
    நன்றி நண்பரே.. :)

    ReplyDelete
  6. //எனக்கும் பிரண்ட்ஸ் கிட்டே இருந்து உடனே ரிசல்ட் வந்துருச்சு சகோ...இந்த படம் நல்லா இருக்குனு...:))) ஸோ கொஞ்ச நாள் விஜய் ஐ வச்சு கிண்டல் பண்ண முடியாது...:(((( //

    உண்மைதான் சகோ... கொஞ்ச கேப் இருந்தா கூட புகுந்து கலாய்ச்சிருக்க மாட்டேனா!!
    நல்ல அருமையான படம்.... மென்மையா அழகா பண்ணியிருந்தாங்க... விஜய் இந்த மாதிரி படங்கள் பண்ணும்போது நல்லா இருக்கு....

    ReplyDelete
  7. ////விஜ‌ய்யின் காஸ்ட்யூம்க‌ளை டிசைன் செய்திருக்கும் ந‌ளினி ஸ்ரீராமுக்கும் பாராட்டுக்க‌ள்!//

    நல்லா அப்செர்வ் பண்றீங்க சகோ...குட்... //

    காஸ்டியூம்ஸ் ரொம்ப அக்கறையோட பண்ணியிருந்தாங்க....
    மைல்ட் கலர்ஸ்ல ரொம்பவே ஸ்லீக்கா காட்டியிருந்தாங்க.... அந்த கேரக்டருக்கும் ரொம்ப அழகா மேட்ச் ஆச்சு விஜயோட காஸ்ட்யூம்ஸ்.... நாற்பதை நெருங்கும் வயதில் இப்படி ஜில்ல்லுன்னு காலேஜ் ஸ்டூடண்டா நடிக்கிறது பெரிய விஷயம்...

    ReplyDelete
  8. ஒருவேளை, மலையாள Bodyguard பார்க்கவில்லை என்றால், என்னால் ரசிக்க முடியுமோ என்னவோ? கதையின் இறுதியில் வரும் ட்விஸ்ட்ல இருந்து எல்லாம் ஒரிஜினல் பார்த்ததில் தெரிஞ்சு போச்சே.

    ReplyDelete
  9. என்ன பாஸ் எல்லாரும் இப்படியே சொல்றீங்க.??? ஓடாத படத்துக்கே ஏதோ செவ்வாய் கிரகத்துலயே 100 நாள் ஓடுன மாதிரி சீன் போடுவானுங்களே.. இப்போ.??? நாளு நாளைக்கி வீட்டிலே இருக்க வேண்டியதுதான்.. போன் பண்ணி வேற டார்ச்சர் பண்றானுங்க...

    ReplyDelete
  10. ஹாய் சித்ரா அக்கா.. :)

    ஓ! ஒரிஜினல் பாத்துட்டீங்களா?!! நான் பார்க்கல....
    மலையாளத்தில் படம் ஹிட் ஆனதுக்குக் காரணமே அந்த க்ளைமேக்ஸ் ட்விஸ்டாகத்தான் இருந்திருக்கும்...
    நம்மவர்களுக்குப் பெரிய மனசு... இரண்டு மணி நேரம் பொழுதுபோனாலே போட்ட காசைத் திருப்பிக் கொடுத்துவிடுவார்கள்.... ஆனால் எனக்கு சொல்லத் தெரியல இந்த ரீமேக்கை நீங்க ரசிக்க முடியுமான்னு!!!
    விஜய், அசின், வடிவேலு ஸ்டார் கேஸ்டிங் திலீப், நயனைவிடக் கொஞ்சம் இளமையா தமிழ் பட்ஜெட்டில் கொஞ்சம் ரிச்சாவும் வந்திருக்கும்னு நினைக்குறேன்....!!

    ReplyDelete
  11. @ தம்பி கூர்மதியன்

    ஹஹாஹா.... உண்மைதான் தம்பி...
    ஆனால் படம் நல்லா வந்திருக்கு.....
    என்னதான் இருந்தாலும் இதுவும் ரீமேக் தானே ஸோ ஒரு நேரடிப்படம் கொடுத்து ஜெயிச்சுட்டு பேசச் சொல்லுவோம்!

    ReplyDelete
  12. எனக்கும் பிடித்திருந்தது.

    ReplyDelete
  13. நன்றி கார்க்கி....
    உங்கள் பதிவைப் படித்தேன்...
    பெர்சனல் ரசிப்புத்தன்மையைத் தாண்டி நேர்மையாகப் படம் நன்று எனச் சொன்ன கண்ணியம் பிடித்திருந்தது.... வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  14. மூன்று படங்களின் விமர்சனத்தையும் வாசித்தேன் பிரபு.விஜய் ன் படம் 3 நாட்கள் தியேட்டரில் ஓடினதாகச் சொன்னார்கள்.நான் இணயத்தில்தான் தரிசித்துக்கொள்வேன்.சினிமா பற்றி நான் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை !

    ReplyDelete
  15. நன்றி ஹேமா அக்கா.. :)

    "ஆடுகளம்" பாருங்க.. அருமையான ஓர் ஆவணப் பதிவு...

    ReplyDelete
  16. Hi anna.... This s SRIBATHI.... Like your writing...
    ஆனால் கொஞ்சம் சினிமாத்தனமாக அமைந்திருக்கும் க‌டைசி காட்சிக‌ளில் ஏனோ காஸ்டியூமிலிருந்து மாடுலேஷன் வரை கார்த்திக்கை அச்சு அச‌லாக அப்படியே இமிடேட் செய்துவைத்திருக்கிறார்!

    Super na...
    Nachu nachu comment panni irukeenga...

    ReplyDelete
  17. Thank you Sir... ;-)
    நீ விஜய் ஃபேனாமே!!
    இப்போதான் நியூஸ் வந்திச்சு :-))

    ReplyDelete
  18. Ama anna theevira vijay fan

    ReplyDelete

வருகைக்கும் வாசிப்புக்கும் ரொம்ப நன்றி... உங்க கருத்தையும் சொல்லலாமே.. :-)