கவலையே படாதீங்க நான் கதையைச் சொல்லிட மாட்டேன்... டைரக்டரே அலட்டிக்காம அஸால்ட்டா சொல்லியிருக்கிற ஒரு விஷயத்தை நான் எதுக்குக் கஷ்டப்பட்டுத் திரும்பச் சொல்லணும்!! போனவருஷம் சிங்கத்துக்கு ஜஸ்டு முன்னால கௌபாய் ஸ்டைல்ல ஒரு காமெடி படம் வந்திச்சே.....பாத்தீங்களா???? அந்தப் படத்தோட கதையை...அதான்... சீரியஸ் ஹீரோ செத்துப்போய்விட அவரைப்போலவே உருவ ஒற்றுமைகொண்ட (!) காமெடி ஹீரோவை "சிங்கம்/சிறுத்தை சாகவில்லை" என்று வில்லன்களின் முன்னிறுத்தி குழப்பியடித்து ஜெயிக்கும் கதையை.... இவர்கள் ஆந்திராவில் பொட்டலம் போட்டுப் போலீஸ் படமாய் ரீமேக்கிக் கொடுத்திறார்கள்..... "தெலுங்குக்கோட்டை சீரியஸ்+சிரியஸ் சிறுத்தை!!"
கருடபுராணம் கண்முன்னே விரியும் ஆந்திரமண்.... செத்துப்போன பின்பு (பல தமிழ்ப்படங்களைப் பார்த்துவிட்டு விமர்சனம் எழுதிய பாவத்துக்காக!) நரகத்தில் பார்க்கநேரும் கேரக்டர்களை அதே கெட்-அப் & மேக்-அப் பில் கண்முன் நிறுத்தும் அதிபயங்கர அரக்க வில்லன்கள்.... அவர்களை சீரியஸ் கார்த்தி மிடுக்காகவும், சிரிப்பு கார்த்தி துடுக்காகவும் அடக்குவதுதான் திரைக்கதை... இடையிடையே அலுக்கலும் குலுக்கலுமாய் அவ்வப்போது இடுப்பைக் காட்டி நடந்துவரும், உச்சிமுதல் பாதம்வரை ஒரே கலராய் வெளீ..ரென்று வெளிறிமின்னும் தமன்னாவும்.... நறுக்கென்று நாலுவார்த்தையும் அதற்கு எட்டு அர்த்தமுமாய் சந்தானமும்.... முறையே.... க்ளாமர் ரெண்டு ஸ்பூன்... காமெடி நாலு ஸ்பூன்!!!
சுருளிராஜன், கவுண்டமணி சாயலில் கோடம்பாக்க சிரிப்புக் கிரிக்கெட்டில் நிலைத்து நின்று ஆடப்போகும் அடுத்த காமெடி பேட்ஸ்மேன் தான் தானென்று சத்தியம் செய்கிறார் சந்தானம்!!... இனி அடுத்த அஞ்சு வருஷத்துக்கு நம்ம ஹீரோக்களுக்கெல்லாம் சந்தேகமில்லாமல் சந்தானம்தான் நண்பேன்டா!!! சிங்கிள் மீனிங்கோ டபுள் மீனிங்கோ.... கண்ணடிக்கும் நேரத்தில் கமெண்ட் அடித்திடும் ஹியூமரால் படம் கடுப்படிக்கும் இடமெல்லாம் இறங்கித் தள்ளிவிட்டாவது நகர்த்திவிடுகிறார்!!!
கார்த்திக்கும் காமெடிதான் கைகொடுக்கிறது.... ஒரிஜினல் சிறுத்தை ரத்னவேல் பாண்டியனின் உருமலைவிட சிரிப்புப் போலீஸாய் செகண்ட் ஹாஃபில் வில்லன் அன்ட் கோவைக் கலாய்த்தெடுக்கும் ராக்கெட் ராஜாவாகத்தான் நினைவில் நிற்கிறார்... "கண்ணா... லட்டு திங்க ஆசையா??" என்று முகபாவனைகள் காட்டுவது.... ஃபர்ஸ்ட் ஹாஃபில் "பருத்திவீர"னின் மெட்ராஸ் வெர்ஷன் காட்டுவது என எல்லாமே படு சில்லி காமெடிகள் என்றாலும் சீரும் சிரிப்புமாய்ப் படத்தை ஒருவழியாக நகரவைத்துவிடுன்றன....
வில்லன்கள்... அவர்களுக்குக் கொடுக்கப்படும் கொடூர பில்டப்புகள்.... அவர்களின் கெட்டப்புகள்....ஹ்ம்ம்ம்ம் ஒண்ணும் சொல்லுறதுக்கில்ல நீங்களே பார்த்து நொந்துக்கோங்க..... சண்டைகள் நியூட்டன் வகுத்த புவிஈர்ப்பு விசையின் சூத்திரங்களை மாற்றியெழுதுகின்றன.... பறந்துகிட்டே இருக்காரு..... அடிச்சுக்கிட்டே இருக்குறாரு.... மூணுதடவைக் கொல்லப்பட்டு ஒருதடவை மட்டும் சாகுறாரு.... ஹ்ம்ம் கார்த்தியும் ஒரு பவர்ஃபுல் ஹீரோவாகிவிட்டார்..... ஜனம் ஏற்றுக்கொண்டுவிட்டால் படம் பிழைக்கும்...
வேல்ராஜின் ஒளிப்பதிவு படத்தின் வேகத்துக்கு டாப்கியர் போடுகிறது... கிடைக்கிற கேப்பிலெல்லாம் கிரேனில் உச்சத்துக்கு ஏறி ஏரியல் வியூ கொடுத்திருப்பது ஆக்ஷன் கோணம்....நுணுக்கமாக வெட்ட எதுவுமில்லாத திரைக்கதையைத் திருத்தமாக ட்ரிம் செய்யமட்டும் பயன்பட்டிருக்கின்றது ஆண்டனியின் கத்திரி...அரைநாளில் வெட்டி ஒட்டிமுடித்து ஊதித்தள்ளியிருப்பார் என்று நினைக்கிறேன்.... வித்யாசாகரின் இசை...கொஞ்சநாளைக்கு டிவியிலும் எஃப் எம்மிலும் ஒலிக்கும் பத்தோடு பதினொன்றாக.... பின்னணி இசை ஓகே...
டைட்டில் போடும்போதே பின்னணி இசையில் "ஜிந்தாஞ்ஜிஞ்ஜிந்தாஞ்ஜிந்தா....." என்று செம குத்து குத்தி அடுத்த இரண்டு சீனிலேயே இது யாருக்கான படம் என்று புரியவைத்துவிடுகிறார்கள்... கட் அடித்துவிட்டு க்ளாஸோடு சேர்ந்துபோய் ஆட்டம்போடும் காலேஜ் டீனேஜ்கள் மற்றும் கூட்டமாய்க் கலாய்க்கும் அலுவலக நண்பர்/நண்பிகளுக்குப் படம் ஃபிட் ஆகும்.... ஆனால் ஹிட் ஆகுமா என்றால் அதையும் அவர்கள்தான் சொல்லவேண்டும்!!! :-)
மும்பையில் என் தூக்கம்வராத தனிமையைக் கொசுவிரட்ட உதவியது இந்த 14 ரீல் படச்சுருள்!!!
இப்போதைக்கு பைபை....
அன்புடன்,
பிரபு எம்
மேலும் பொங்கல் படங்களுக்கு...
ஆடுகளம் , காவலன்
.

எழுத்து நடை அருமையா இருக்கு பிரபு... உங்களோட இந்தப் பதிவு சூப்பர் ஹிட்...
ReplyDeleteவரிக்கு வரி கலக்கி இருக்கீங்க... எந்த வரியை மேற்கோள் காட்டி பாராட்டுவது என்று தெரியவில்லை...
ReplyDeleteஅருமையாக இருக்கிறத..
ReplyDeleteஇனிய தமிழ் பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்.
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
நான் ஏன் பதிவெழுத வந்தேன் (தொடர் பதிவு)..
விவர்சனமும் அதை விட நீங்க சொல்லிய விதமும் ரசிக்கதகுந்த மாதிரியே இருந்துச்சு
ReplyDeleteஜூப்பரா இருக்கு பிரபு.. நல்லா எழுதியிருக்கீங்க.. பிரபா சொல்ற மாதிரி எழுத்து நடை அபாரமா இருக்கு..
ReplyDeleteGood.:-)))))))
ReplyDeleteரொம்ப நன்றி பிரபா :)
ReplyDeleteஅன்பு சகோதரன் மதி சுதாவின் சுடுசோறு சக்கரைப் பொங்கல் வாழ்த்துக்கு நன்றியும் தாமதமான வாழ்த்துக்களும்!!
ReplyDeleteரொம்ப நன்றி ஆமினா அக்கா.. :)
ReplyDeleteநன்றி தம்பி..
ReplyDeleteநன்றி ஸ்ரீ அண்ணா....
ReplyDelete//கட் அடித்துவிட்டு க்ளாஸோடு சேர்ந்துபோய் ஆட்டம்போடும் காலேஜ் டீனேஜ்கள் மற்றும் கூட்டமாய்க் கலாய்க்கும் அலுவலக நண்பர்/நண்பிகளுக்குப் படம் ஃபிட் ஆகும்.... ஆனால் ஹிட் ஆகுமா என்றால் அதையும் அவர்கள்தான் சொல்லவேண்டும்!!! :-). ஆனால் ஹிட் ஆகுமா என்றால் அதையும் அவர்கள்தான் சொல்லவேண்டும்!!! :-)//
ReplyDeleteஇது மாஸ் படமாக்கும்...:)))) பிரபு...அப்படி தான் கார்த்தி சொல்லிட்டு இருக்கார்....ஒபேனிங் சாங்...பில்ட் அப் சாங் ,குத்து சாங் னு விஜய் படம் பார்த்த திருப்தி இருந்துருக்கு போலே சகோ க்கு....
//கட் அடித்துவிட்டு க்ளாஸோடு சேர்ந்துபோய் ஆட்டம்போடும் காலேஜ் டீனேஜ்கள் மற்றும் கூட்டமாய்க் கலாய்க்கும் அலுவலக நண்பர்/நண்பிகளுக்குப் படம் ஃபிட் ஆகும்.... //
இதுக்கு விளக்கம் தேவை...mr .பிரபு...:)))))))))))))))
ஹஹஹா.... இது மாஸ் படம் இல்ல சகோ இது மசாலா படம்...
ReplyDeleteபடு லோக்கல்... சீப் டேஸ்ட் தான் ஆனா படம் எப்படியோ நகர்ந்துரும்...
ஒருதடவ பார்க்கலாம்.... செகண்ட் ஹாஃபில் கார்த்தியை காமெடி செய்ய வெச்சு பெரிய எமகண்டத்துல இருந்து நம்மளயும் படத்தையும் சேர்த்துக் காப்பாத்திட்டாரு இயக்குனர்!
////கட் அடித்துவிட்டு க்ளாஸோடு சேர்ந்துபோய் ஆட்டம்போடும் காலேஜ் டீனேஜ்கள் மற்றும் கூட்டமாய்க் கலாய்க்கும் அலுவலக நண்பர்/நண்பிகளுக்குப் படம் ஃபிட் ஆகும்.... //
ReplyDeleteஇதுக்கு விளக்கம் தேவை...mr .பிரபு...:))))))))))))))) //
இப்போயெல்லாம் இவங்க ஆசீர்வாதம் இல்லாம எந்தப் படமுமே போட்ட காசை எடுக்க முடியாது சகோ!
அவங்க எதிர்பார்க்குற சத்தமும் ரத்தமும் சேட்டையும் குத்துப்பாட்டும் இந்தப் படத்துல நிறைய இருக்கு.....
நல்லா ஆட்டம் போட்டுட்டு "ஒரு தடவ பார்க்கலாம் மச்சி.."ன்னு சொல்லிட்டு போயிட்டே இருப்பாங்க இந்த தமிழ் சினிமா காவலர்கள்!
கூட்டமாகப் போய் கமெண்ட் அடித்துக் கலாய்க்கிற கூட்டத்துக்கு செம தீணி போடும் படம்... நான் தனியா போனேன் நண்பர்களோட போயிருந்தால் "குருவியைப் பார்த்த கதை" மாதிரி கலாய் பதிவுதான் போட்டிருப்பேன்!!
விளக்கம் ஓகேயா மை சகோ?? :))))))))))))
சிறுத்தை பிராண்டு கொசுவர்த்திச்சுருளை எங்க மாப்பு கண்டுபுடுச்ச?
ReplyDeleteஹஹஹா.... பல தியேட்டர்களில் கிடைக்குது மாமா... கொஞ்ச நாள்ல நல்ல பிரிண்டுல பாண்டி பஜாரிலும் கிடைக்கும்! :))
ReplyDeleteஇது ஜஸ்ட் டைம்பாஸ் கொசுவர்த்தி...